Tata Punch EV: சும்மாவே பஞ்ச் காருக்கு செம்ம டிமேண்ட்.. இப்ப புதுசா 2 அப்டேட்கள், ஏசி சார்ஜருடன் கூடுதலாக..
Updatd Tata Punch EV: டாடா நிறுவனத்தின் பஞ்ச் மின்சார கார் மாடலின் மேம்படுத்தப்பட்ட எடிஷன் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updatd Tata Punch EV: டாடா நிறுவனத்தின் பஞ்ச் மின்சார கார் மாடலின் மேம்படுத்தப்பட்ட எடிஷனில் இரண்டு அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அப்டேடட் டாடா பஞ்ச் EV 2025:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் விற்பனையகவும் மின்சார கார்களில் ஒன்றாகவும், டாடா நிறுவனம் சார்பில் அதிகம் விற்பனையாகவும் மின்சார காராகவும் பஞ்ச் திகழ்கிறது. மலிவான விலை, வலுவான செயல்திறன், நீண்ட ரேஞ்ச் மற்றும் நடைமுறைக்க ஏற்ற வடிவமைப்பு ஆகியவை இந்த காரை, எண்ட்ரி லெவர் பிரியர்களுக்கு நல்ல தேர்வாக மாற்றுகிறது. இந்நிலையில் தான், நடப்பாண்டிற்கான மேம்படுத்தல்களாக இரண்டு அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை, சார்ஜர் மற்றும் வண்ண விருப்பங்கள் தொடர்பான அப்டேட்கள், பஞ்ச் மாடலின் விற்பனையை மேலும் ஊக்கப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்டேடட் டாடா பஞ்ச் EV - புதிய கலர் ஆப்ஷன்
அறிவிப்பின்படி, ப்யூர் க்ரே மற்றும் சூப்பர் நோவா காப்பர் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்கள் புதியதாக இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இந்த காரில் எம்பவர்ட் ஆக்சைட், சீவீட், டேடோனா க்ரே, ஃபியர்லெஸ் ரெட் மற்றும் ப்ரிஸ்டின் வைட் ஆகிய டூயல் டோன் ஆப்ஷன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதிய வண்ண விருப்பங்கள் பஞ்சை தேர்வு செய்வோருக்கு புதிய ஆப்ஷன்களை வழங்குகிறது. அதன் மூலம், காரின் பரவலாக்கம் அதிகரித்துள்ளது.
அப்டேடட் டாடா பஞ்ச் EV - ஏசி சார்ஜர்
பஞ்சில் வழங்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய அப்டேட்டாக அதன் சார்ஜிங் ஃப்ரண்ட் அமைந்துள்ளது. அதன்படி, இந்த மின்சார மைக்ரோ எஸ்யுவி தற்போது 1.2C சார்ஜிங் ரேட்டை அனுமதிக்கிறது. அதன் மூலம், இனி 10 முதல் 80 சதவிகிதம் பேட்டரியை சார்ஜ் செய்ய வெறும் 40 நிமிடங்களே போதுமானதாகும். கூதலாக வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்வதன் மூலம், பயனர்கள் 90 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இது சார்ஜிங் செய்வதற்காக மட்டுமே நீண்ட நேரம் ஒரே இடத்தில் முடங்கியிருப்பதை தவிர்க்க உதவுகிறது. இந்த இரண்டையும் தவிர, 5 பேர் அமரும் வகையிலான வசதிகளை கொண்ட பஞ்ச் எஸ்யுவியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் தொடர்கின்றன.
அப்டேடட் டாடா பஞ்ச் EV - பேட்டரி விவரங்கள்
பஞ்சில் இடம்பெற்றுள்ள 25KWh பேட்டரி பேக் ஆனது 315 கிலோ மீட்டர் ரேஞ்சையும், 35KWh பேட்டரி பேக் ஆனது 421 கிலோ மீட்டர் ரேஞ்சையும் அளிப்பதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய பேட்டரி ஆனது 122PS மற்றும் 190Nm ஆற்றலை உற்பத்தி செய்வதன் மூலம், இந்த எஸ்யுவி ஆனது பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 9.5 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை மின்சார எஸ்யுவி ஆன பஞ்ச், Acti.ev பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.
அப்டேடட் டாடா பஞ்ச் EV - அம்சங்கள், விவரங்கள்
டாடா பஞ்சில் ஏரோ அலாய் வீல்ஸ், க்ளோஸ்ட் ஆஃப் ஃப்ரண்ட் க்ரில், மின்சார எடிஷனுக்கு என பிரத்யேகமான நீல நிற அக்செண்ட்கள் ஆகியவை ஸ்டைலிங் எலிமெண்ட்ஸ்களாக உள்ளன. இதுபோக மல்டி மோட் ரிஜெனரேடிவ் ப்ரேக்கிங், இன்ஃபோடெயின்மெண்ட் மற்று இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்கான இரண்டு 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், வெண்டிலேடட் லெதரேட் சீட்ஸ், டச் அடிப்படையிலான க்ளைமேட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளnஅ. சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் டாடா பஞ்ச் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்துவது குறிப்பிடத்தக்கது.
பயணத்தை மேலும் வசதியாக்குவதற்காக வயர்லெஸ் ஸ்மார்ஃபோன் கனெக்டிவிட்டி, சன்ரூஃப், 7 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா சிஸ்டம், 90 டிகிரி ஓபனிங் டோர்ஸ், இரண்டாவது வரிசையில் நடைமுறைக்கு உகந்த சமதளமான ஃப்ளோர், 366 லிட்டருக்கான பூட் ஸ்பேஸ் மற்றும் ஃப்ரங்கிற்காக 14 லிட்டர் இடமும் வழங்கப்பட்டுள்ளது.
அப்டேடட் டாடா பஞ்ச் EV - விலை
மேற்குறிப்பிடப்பட்டபடி வண்ண விருப்பங்கள் மற்றும் சார்ஜரில் இரண்டு அப்டேட்கள் வழங்கப்பட்டாலும், விலை எதுவும் திருத்தம் செய்யப்படவில்லை. அதன்படி, டாடா பஞ்சின் விலை 9 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 14 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான பயன்பாட்டிற்கு பஞ்ச் காரின் மீது வாரண்டி வழங்கப்படுகிறது. தூசி மற்றும் தண்ணீர் ரிசிஸ்டன்ஸ் ஆக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூரில் நாடா நெக்சான், டாடா டியாகோ மற்றும் சிட்ரோயன் eC3 ஆகிய கார் மாடல்களுடன் டாடா பஞ்ச் போட்டியிடுகிறது.





















