PM Modi: ”தீபாவளிக்கு பரிசு காத்திருக்கு”சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிப்பு
ஜிஎஸ்டி வரி குறைப்புக்கான நேரம் வந்துவிட்டதாகவும், இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாற்றம் சிறு, குறு தொழில்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரும் பலன் அளிக்கும் என்றார்

தீபாவளி அன்று நடுத்தர மக்களுக்கு பெரிய தீபாவளி பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.
சுதந்திர தின விழா
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடும் நிலையில், தேசியத் தலைநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் 12-ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
தீபாவளி பரிசு காத்திருக்கு:
அப்போது பேசிய அவர் தீபாவளி அன்று மக்களுக்கு பெரிய பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி குறைப்புக்கான நேரம் வந்துவிட்டதாகவும், இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாற்றம் சிறு, குறு தொழில்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரும் பலன் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச விண்வெளி சாதனை
இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணம் செய்து திரும்பி, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் என மோடி பாராட்டினார். விரைவில் இந்தியா தனது சொந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான புதிய திட்டம்:
பிரதமர் மோடி இளைஞர்களுக்காக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். " பிரதமரின் விகாசித் பாரத் யோஜனா இன்று, ஆகஸ்ட் 15 முதல் செயல்படுத்தப்படுகிறது. அரசாங்கத்தால் ரூ.15,000 வழங்கப்படும்" என்று அவர் கூறினார்.
பாக் எச்சரிக்கை:
மேலும் பேசிய பிரதமர் "வேறொருவரின் கோட்டைக் குறைக்க நம் சக்தியை வீணாக்கக் கூடாது, நம் சொந்த கோட்டை நீட்டிக்க நம் முழு சக்தியையும் பயன்படுத்த வேண்டும். இதைச் செய்தால், உலகமும் நம் பலத்தை ஏற்றுக்கொள்ளும்"
"நமது நாடு பல தசாப்தங்களாக பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. இப்போது நாம் ஒரு புதிய இயல்பு நிலையை ஏற்படுத்தியுள்ளோம். பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளுக்கு பலம் கொடுப்பவர்களையும் நாங்கள் இனி வேறுபடுத்திக் கருத மாட்டோம். அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது" என்று பிரதமர் மோடி கூறினார்.
"ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயக்கூடாது என்று இந்தியா முடிவு செய்துள்ளது" என்று பாகிஸ்தானை எச்சரித்தார் பிரதமர் மோடி.
"ஆபரேஷன் சிந்தூரில் நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டீர்கள், அவை எங்களிடம் உள்ளன, அவை எதிரியை ஒரு நொடியில் அழித்துவிட்டன. நாங்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இல்லாவிட்டால், மற்றவர் உங்களுக்கு உதவி செய்வாரா இல்லையா என்று நாங்கள் கவலைப்பட்டிருப்போம், ஆனால் எங்கள் சுயசார்புதான் இந்த நடவடிக்கையை எங்கள் சொந்த திறனின் பலத்தில் மேற்கொண்டோம், அதன் முடிவுகளை நீங்கள் காண்கிறீர்கள்" என்றூ தனது உரையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.






















