தெரியாம பேசிட்டேன் மன்னிச்சிடுங்க...சக நடிகையை உருவகேலி செய்த மிருணால் தாகூர்
பாலிவுட் நடிகையை நடிகை மிருணாள் தாகூர் உருவ கேலி செய்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து மிருணாள் தாகூர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்

சர்ச்சையில் சிக்கிய மிருணாள் தாகூர்
சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்களிடையே கவனமீர்த்தவர் நடிகை மிருணாள் தாகூர். நடிகர் தனுஷை டேட் செய்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவை மிருணாள் தாகூர் உருவகேலி செய்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் பிபாஷா பாசுவிற்கு ஆண்களை போல் உடல் இருப்பதாகவும் தான் அவரை விட மேலானவர் என்று பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மிருணாள் தாகூர் மீது கடுமையான விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்து வருகிறார்கள்.
மன்னிப்பு கேட்ட மிருணாள் தாகூர்
இப்படி வெளிப்படையாக இன்னொரு நடிகையை உருவகேலி செய்த மிருணால் தாகூர் பிரபலமான பின் பல நிகழ்ச்சிகளில் தான் உருவகேலிக்கு ஆளானதாக பேசியும் இருக்கிறார். " சமூக வலைதளங்களில் பலர் என் உடலை உருவக்கேலி செய்து வருகிறார்கள். என்னுடைய உடலை கொண்டாடுவேன். நாம் தினமும் தெருவில் பார்க்கும் இந்தியப் பெண்கள் அனைவரும் பெரிய இடையைக் கொண்டவர்கள் தான். அவர்கள் அனைவரும் அவ்வளவு அழகான பெண்கள். என்னுடைய உடலை எடுத்துக் காட்டும் ஆடைகளை அணிவதை நான் தவிர்த்து வந்தேன். ஆனால் இப்போது எல்லாம் எந்த மாதிரியான ஆடையாக இருந்தாலும் அதை அணிந்துகொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று மிருணாள் தாக்கூர் தெரிவித்திருந்தார். இப்படி பேசியவரா சக நடிகையை உருவகேலி செய்தார் என பலர் ஆச்சரியமடைந்துள்ளார்கள்.
தனது கருத்திற்கு எதிர்ப்புகள் வரத் துவங்கியதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார் மிருணாள் தாகூர் " 19 வயதில் நான் ஒரு டீனேஜராக இருந்தபோது பல முட்டாள்தனமான விஷயங்களைச் சொன்னேன். என் வார்த்தைகள் இன்னொருவரை புன்படுத்தக் கூடியவை என்பதை நான் உணர்ந்துகொள்ளவில்லை. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
யாரையும் உடல் ரீதியாக அவமானப்படுத்துவது எனது நோக்கமல்ல. அது ஒரு நேர்காணலில் விளையாட்டுத்தனமான கேலிக்கூத்தாக இருந்தது, அது மிகைப்படுத்தப்பட்டது. ஆனால் அது எப்படி வந்தது என்பதை நான் புரிந்துகொள்கிறேன், மேலும் நான் என் வார்த்தைகளை கவனமாக பேசியிருக்க வேண்டும் என விரும்புகிறேன். காலப்போக்கில், வெவ்வேறு விதமான அழகை மதிக்க நான் கற்றுக் கொண்டேன்" என மிருணாள் தாகூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்






















