Israel Hamas Ceasefire Deal: அப்பாடா..! முடிவுக்கு வந்த 15 மாத காஸா போர், இஸ்ரேலும் ஹமாசும் ஒப்புதல்
Israel Hamas Ceasefire Deal: காஸாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த, இஸ்ரேலும் ஹமாசும் சம்மதம் தெரிவித்துள்ளன.
Israel Hamas Ceasefire Deal: இஸ்ரேலும் ஹமாசும் பிணைக் கைதிகளை விடுவிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளன.
காஸாவில் போர் நிறுத்தம்:
இஸ்ரேலும், ஹமாஸும் காசாவில் போர்நிறுத்தம் மேற்கொண்டு, 15 மாதங்களுக்கும் மேலான போருக்குப் பிறகு, டஜன் கணக்கான பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கத்தார் மற்றும் ஹமாஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலிய தற்காப்புப் படைகளுக்கும், ஹமாஸ் போராளிக் குழுவுக்கும் இடையேயான சண்டைக்கு இடைநிறுத்தம் அளித்து, மத்திய கிழக்கில் மோதலை நிறுத்தியது. பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்த கத்தார் பிரதமர், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து சர்ச்சையை தீர்த்த சிறிது நேரத்திலேயே காஸாவில் போர் நிறுத்தம் வந்துள்ளது.
24 மணி நேரத்தில் 62 பேர் பலி
அல் ஜசீரா அரபியின் கூற்றுப்படி, போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒப்புதலை அதன் பிரதிநிதிகள் மத்தியஸ்தர்களுக்கு வழங்கியுள்ளனர் என்று ஹமாஸ் கூறியுள்ளது. இருப்பினும், இந்த முன்மொழிவுக்கு இஸ்ரேல் இன்னும் பதிலை அறிவிக்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலியப் படைகள் காஸா மீது தாக்குதல்களை முடுக்கிவிட்டன, பள்ளிக்கூடமாக மாறிய தங்குமிடம் மற்றும் பல வீடுகள் மீது குண்டுவீசப்பட்டதில், குறைந்தது 62 பேர் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன?
பொதுமக்கள் மகிழ்ச்சி:
போர் நிறுத்தம் தொடர்பன செய்தி வெளியானதும் காஸாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில், ஏராளமான மக்கள் ஒன்று திரண்டனர். இந்த ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் இடையிலான வன்முறையை நிறுத்தும் என்று மக்கள் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தெரிவித்தனர். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததோடு, பணயக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். ட்ரம்பின் மத்திய கிழக்குத் தூதுவர் பிடனின் மத்திய கிழக்கு ஆலோசகர் பிரட் மெக்குர்க்குடன், கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.