மேலும் அறிய
இ-பட்டா இருக்கு ஆனால் இடத்தை அளந்து தரமாட்றாங்க.. மதுரையில் முதிய தம்பதி கண்ணீர்
ஆதிதிராவிட நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இடையே உள்ள குளறுபடியால் 3 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் படியேறி தவித்து மன உளைச்சலுக்கு ஆளான முதிய தம்பதியினர்.

முதிய தம்பதி
Source : whats app
ஆதி திராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இ- பட்டா இருக்கு. ஆனால் இடத்தை அளந்து தரமாட்றாங்க 3 வருசமாக தீர்வே கிடைக்கல என கண்ணீர் வடிக்கும் முதிய தம்பதியினர்.
வழங்கப்பட்ட இ-பட்டா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட விக்கிரமங்கலம் நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் - காளியம்மாள் முதிய தம்பதியினர். கடந்த 30 ஆண்டுகளாக நரியம்பட்டி கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்துவந்த நிலையில் வீட்டு வரியும் தொடர்ந்து செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ராமன் காளியம்மாள் தம்பதியினர் வசித்த குடிசை வீட்டிற்கு பட்டா வழங்கப்பட்டது. அனுமந்த பட்டா பின்னர் இ- பட்டாவும் வழங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றது. ஆனாலும் பட்டாவுக்கு உரிய இடத்தை அளவை செய்து கொடுக்க தொடர்ந்து பல முறை வட்டாச்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
தர்ணா போராட்டா
மேலும் நில அளவைக்கான பணம் செலுத்தி விண்ணப்பித்த நிலையில் 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு என அனைத்து அலுவலகங்களிலும் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காத நிலையில் உயர் நீதிமன்றத்தில் ராமன் காளியம்மன் தரப்பினர் வழக்கு தொடரப்பட்டு உடனடியாக நிலத்தை அளந்து கொடுக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கூட பட்டா வழங்கப்பட்ட அவர்களது இடத்தை அளக்காமல் தாமதித்துவருவதால் வயது முதிர்வால் அலைய முடியாத நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகிய முதிய தம்பதியினர் பட்டா இடத்தை அளக்க கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் திட்டத்தில் மனு அளிப்பதற்காக வருகை தந்தனர் 3 ஆண்டுகளாக அரசு அலுவலகங்களுக்கு படியேறி, படியேறி அலைந்து மன உளைச்சளோடு, கால் வலியும் ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதிய தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் அவருக்கு திருமணமாகி தனியாக இருப்பதால் முதிய தம்பதியினர் மட்டும் வசிக்கூடிய குடிசை வீடும் முழுமையாக சேதமடைந்துள்ள நிலையில் மழை, வெயில் காலங்களில் தங்க முடியாத நிலையில் வீடு கூட கட்ட முடியாத நிலைக்கு ஆளாகி தவித்து வருகின்றனர். 30 ஆண்டுகளாக வசித்த வீட்டிற்கு அரசு கொடுத்த பட்டா இருந்தும் அளவீடு செய்யாமல் அலைக்கழிப்பதால் செய்வதறியாது தவித்துநிற்கின்றனர் முதிய தம்பதியினர்.
முதிய தம்பதியினர் அலைச்சலுக்கு ஆளாகிவருகின்றனர்
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் கிராமத்தில் உள்ள பொது இடமான வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை ஆதிதிராவிட நலத்துறையினர் பட்டா கொடுத்து விட்டதாகவும் இதனால் இடத்தை அளந்துகொடுக்க இயலாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். அரசுத்துறையான ஆதி திராவிட நலத்துறை உரிய ஆய்வு கூட மேற்கொள்ளாமல் பட்டா வழங்கியதால் மூன்று ஆண்டுகளாக முதிய தம்பதியினர் அரசு அலுவலகங்களில் அலைந்து திரிந்து தற்போது நடக்க கூட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர். பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தை வழங்கும்போது தவறு நடந்துள்ளதால் முதிய தம்பதியினரை அலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















