Tirupati Accident: திருப்பதி அருகே சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள், 2 ஆண்கள் ஒரு சிறுவன் என 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி அருகே பூத்தலப்பட்டு – நாயுடுப்பேட்டை சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயமடைந்த இரண்டு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.




















