இந்திய ராணுவ தினம் - தெரிந்துகொள்ள வேண்டியவை?
முதலாம் உலகப்போரில் 1.3 மில்லியன் இந்திய ராணுவ வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்திற்காக சண்டையிட்டனர். இந்த போரில் 74 ஆயிரம் இந்தியர்கள் வீர மரணம் அடைந்தனர்.
டெல்லியில் உள்ள இந்தியா கேட் அவர்களின் வீரமரணத்தைப் போற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் 1.2 மில்லியன் ஆக்டிவ் ட்ரூப் மற்றும் 0.9 மில்லியன் ரிசர்வ் ட்ரூப் உள்ளனர்.
உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமான சியாச்சின் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் இந்த இடம் உள்ளது
61வது குதிரைப்படை படைப்பிரிவு இந்திய ராணுவத்தில் உள்ள மிகப்பெரிய குதிரைப்படைப் பிரிவு ஆகும்.அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மிகவும் பெரிய ராணுவமாக இந்திய ராணுவம் திகழ்கிறது.
ஐ.நா. அமைதிப்படையில் அதிகளவு இந்திய வீரர்கள் உள்ளனர்.
உலகிலேயே உயரமான பாலங்களில் ஒன்றான லடாக்கில் உள்ள பெய்லி பாலத்தை 1982ம் ஆண்டு இந்திய ராணுவம் கட்டியது.
இந்திய ராணுவம் நாட்டின் பல பேரிடர்களில் நேரடியாக களமிறங்கிய துரிதமான மீட்பு படையில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு நடந்த வயநாடு பேரிடர் துயரச்சம்பவத்திலும் இந்திய ராணுவம் திறம்பட செயல்பட்டது.
இராணுவ வீரர்களின் ஈடற்ற பங்களிப்பைப் போற்றுவோம்.