Minister Duraimurugan: பெண்கள் பாதுகாப்பை கேள்வி கேட்ட வானதி! ராமாயணத்தை இழுத்த துரைமுருகன்! கதிகலங்கிய பேரவை!
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் இன்று பெண்கள் பாதுகாப்பு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுகிறது எனவும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது எனவும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு தமிழ்நாட்டில் யாருக்கும் எந்த அச்சமும் இல்லை எனத் தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், ராமாயணத்திலே பெண்ணை தூக்கி சென்று விட்டான். எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். நடவடிக்கை என்ன என்றுதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
வானதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி “பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக இருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் ஒரு பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய வானதி சீனிவாசன், எந்த குற்றச்சாட்டை வைத்தாலும் உடனே பாஜக ஆளும் மாநிலங்களுக்கு செல்கிறீர்கள் என புகார் தெரிவித்தார்.





















