Crime : Tinder-இல் சந்தித்த பெண்.. விரித்த காதல் வலை.. இந்திய வம்சாவளி மருத்துவர் செய்த கொடூரம்..
கடந்த மாதம், எடின்பர்கில் உள்ள உயர் நீதிமன்றம், மனேஷ் கில்லை குற்றவாளி என தீர்பளித்து தண்டனை வழங்கியது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பெண் ஒருவர் மீது தீவிர பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவருக்கு ஸ்காட்லாந்து நீதிமன்றம், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
கடந்த மாதம், எடின்பர்கில் உள்ள உயர் நீதிமன்றம், மனேஷ் கில்லை குற்றவாளி என தீர்பளித்து தண்டனை வழங்கியது. கடந்த 2018ஆம் ஆண்டு, மைக் என்ற பெயரில் ஆன்லைன் டேட்டிங் செயலியில் பதிவு செய்த மனேஷ் கில், பாதிக்கப்பட்ட பெண்னை ஸ்டிர்லிங்கில் உள்ள விடுதியில் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான அவர், அங்கு வைத்துதான் பாலியல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஸ்காட்லாந்து காவல்துறையின் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் துப்பறியும் ஆய்வாளர் ஃபோர்ப்ஸ் வில்சன் கூறுகையில், "கில்லின் தண்டனையானது பாலியல் குற்றங்களில் குற்றவாளியாகக் காணப்பட்ட எவருக்கும் தெளிவான செய்தியை அனுப்பி இருக்கும். நீங்கள் நீதிக்கு முன் கொண்டு வரப்படுவீர்கள்.
கில் தனது கொடூரமான நடத்தைக்கான விளைவுகளை இப்போது சந்திக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண், முன் வந்து தனது கதையைச் சொல்வதில் அளப்பரிய துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் எங்கள் விசாரணையின் போது அவர் செய்த உதவிக்கு நான் அவளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்றைய முடிவு அவளுக்கு ஒருவித திருப்தியை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
பாலியல் துஷ்பிரயோகத்தை கையாள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களிடம் சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வழங்க கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம். பாலியல் துஷ்பிரயோகத்தை எந்த வடிவத்திலும் புகாரளிக்க நான் ஊக்குவிப்பேன். ஏனெனில் அனைத்து அறிக்கைகளும் முழுமையாக விசாரிக்கப்படும்" என்றார்.
நீதிமன்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட செவிலியர் மாணவியான பெண், பாலியல் தாக்குதலுக்கு பிறகு தனது உடல் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டது என்பதை விவரித்தார். ஆனால், இந்த சம்பவம், இருவரின் உடன்பாடுடன் நடைபெற்றதாக அவர் விளக்கம் அளித்தார்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் அதற்கு சம்மதிக்க மறுத்த காரணத்தால், குற்றம்சாட்டப்பட்ட கில்லை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது. அவரது நடத்தையை கண்காணிப்பதற்காக பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டிலும் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்