"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.

கீழடி ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே ஒரு முறை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் சில விளக்கங்களை கேட்டு மத்திய அரசு திருப்பி அனுப்பியது. பின்னர், மத்திய அரசு கேட்டபடி திருத்தி மீண்டும் அனுப்பப்பட்ட கீழடி ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
"அறிக்கையை வெளியிட சிறிதும் தயங்கவில்லை"
இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தமிழக அரசும் மாறி மாறி குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில், கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு எக்ஸ் தளத்தில் தமிழில் பதில் அளித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை.
உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால், இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.
கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம்:
அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின்ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு…
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) June 11, 2025
தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!






















