Thug Life Copycat: காப்பி சர்ச்சையில் சிக்கிய 'தக் லைஃப்' திரைப்படத்தின் கதை! மணிரத்னம் இப்படி செய்தாரா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் தற்போது காப்பிசர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் படங்கள் என்றாலே அது தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு . அதை தாண்டி சில நாவல்களை தழுவி எடுத்தால் கூட அதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படம் கூட கல்கி கைவண்ணத்தில் உருவான புராண கதையை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, கமல்ஹாசனை வைத்து 38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு படத்திற் இயக்கப் போவதை உறுதி செய்தார். அதன்படி கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் 'தக் லைஃப்' திரைப்படம் உருவானது. இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், அபிராமி, திரிஷா போன்ற பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் தக் லைஃப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ஆரம்பம் முதலே இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்... டீசர் மற்றும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது. இந்தப் படத்தின் ஆல்பத்தில் மொத்தம் பத்து பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும் படத்தில் ஓரிரு பாடல் மட்டுமே இடம்பெற்றது. குறிப்பாக ஜிங்குச்சான் பாடல் மட்டுமே முழுமையாக இடம்பெற்றிருந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தம் என்றே கூறலாம். ஒரு சில ரசிகர்கள் நல்ல பாடல்களை கூட மணிரத்னம் தன்னுடைய படங்களில் ஏன் வைப்பதில்லை என தங்களுடைய ஆதங்கத்தையும் கொட்டி தீர்த்தனர்.

ஜூன் ஐந்தாம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன தக் லைஃப் திரைப்படம், ஐந்து நாட்களை கடந்தும் கூட இதுவரை ரூ.100 கோடி வசூலை எட்டவில்லை. இது இப்படத்திற்கு மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது.
படத்தின் தோல்வி குறித்தும், அதில் இடம்பெற்ற திரிஷா கதாபாத்திரம் குறித்த சர்ச்சைகளே இன்னும் ஓய்ந்திடாத நிலையில், தற்போது 'தக் லைஃப்' திரைப்படம் காப்பி சர்ச்சையில் வேறு சிக்கி உள்ளது. எழுத்தாளர் கணேசன் என்பவர் எழுதிய 'அமானுஷ்யம்' என்கிற நாவலில் இடம் பெற்ற ஆரம்ப அத்தியாயங்கள் போல இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். இடைவேளைக்கு முந்தைய சில காட்சிகளும், பிந்தைய சில காட்சிகளையும் குறிப்பிட்டு கூறிவருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து இந்த நாவலை தேடிப்பிடித்து, படித்தவர்களும் நாவலில் இடம்பெற்ற வசனங்கள் குறைக்கப்பட்டு தக் லைஃப் திரைப்படத்தில் விஷுவலாக காட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர். எனவே தற்போது தக் லைஃப் திரைப்படம் புதிய காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு மணிரத்தினம் தரப்பில் இருந்து... எந்த மாதிரியான விளக்கம் கொடுக்கப்படும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















