7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு திட்டங்களும், ரயில்வே கட்டமைப்பில் மேலும் 318 கி.மீ. தொலைவிற்கு ரயில் பாதையை கணிசமான அளவு அதிகரிக்க உதவுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ரயில்வே அமைச்சகத்தின் மொத்தம் ரூ. 6,405 கோடி மதிப்பிலான இரண்டு கூடுதல் ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல்:
1. கோடெர்மா - பர்கானா இரட்டைப் பாதைத் திட்டம் (133 கி.மீ.) – ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சுரங்கப் பகுதி வழியாக செல்லும் ரயில் பாதை மற்றும் பாட்னா - ராஞ்சி இடையே மிகக் குறுகிய ரயில் இணைப்புப் பாதையாக செயல்படுத்தப்பட உள்ளது.
2. பல்லாரி - சிக்ஜாஜூர் இரட்டைப் பாதைத் திட்டம் (185 கி.மீ.) இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ரயில் பாதை கர்நாடகா மாநிலம் பல்லாரி, சித்ரதுர்கா மாவட்டங்கள், ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் வழியாக செல்கிறது.
டிராபிக் பிரச்னைக்கு தீர்வு காணும்:
இந்த இரண்டு திட்டங்களும் ரயில் வழித்தடத்தை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக ரயில்வே துறையின் செயல்பாட்டுத் திறன் மற்றும் சேவைகள் மீதான நம்பகத்தன்மை மேம்படும். இந்த பல்பாதை ரயில் பாதை திட்டங்கள் பயணிகளின் கூட்ட நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் "தற்சார்பு" நிலையை எட்ட வழிவகை செய்வதுடன் வேலைவாய்ப்பையும் அதிகரிக்க இந்த திட்டங்கள் உதவும்.
தடையற்ற போக்குவரத்து:
பல்வேறு ரயில் வழித்தடங்கள் இணைப்பை நோக்கமாக கொண்டுள்ளது பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம். ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயணிகள், சரக்குகள் மற்றும் சேவைகள் தடையற்று செல்வதை இது வகை செய்கிறது.
ஜார்க்கண்ட், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு திட்டங்களும், ரயில்வே கட்டமைப்பில் மேலும் 318 கி.மீ. தொலைவிற்கு ரயில் பாதையை கணிசமான அளவு அதிகரிக்க உதவுகிறது.
இதையும் படிக்க: TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!





















