விஜயகாந்துக்கு ஜோடி... காதல் தோல்வியால் 34 வயதில் வாழ்க்கையே முடித்து கொண்ட முன்னணி நடிகை யார் தெரியுமா?
பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை காதலனால் ஏமாந்து 34 வயதில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சோக கதையை பற்றி தெரியுமா?

சினிமா என்பது ஒரு கானல் நீர். இன்று உச்சத்தில் இருப்பவர் எப்போதும் அப்படியே இருக்க முடியாது. ஒரே மாதத்தில் கூட அவர் சரிவை சந்திக்கலாம். அதே போல் பிரபலங்களின் நிஜ வாழ்க்கையிலும் ஏராளமான ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டு தான் உள்ளது.
நடிகர்கள் திருமணத்திற்கு பிறகு எத்தனை வயது வரை வேண்டுமானாலும் ஹீரோவாகவே நடிக்கலாம். ஆனால், ஹீரோயின்கள் அப்படியில்லை. இளமையும், அழகும் இருக்கும் வரையில் தான் அவர்களால் ஹீரோயின்களாக கொடி கட்டி பறக்க முடியும். ஒருவேளை அவர்களுக்கு திருமணமாகிவிட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே மிகவும் அரிது தான்.
ஆனால் நயன்தாரா - சமந்தா போன்ற சில நடிகைகள் மட்டுமே திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்கள் மனதை வென்று நம்பர் ஒன் நடிகையாக, கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து காதலனால் ஏமாற்றப்பட்டு 34 வயதில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட நடிகை வேறு யாரும் அல்ல விஜி தான். கங்கை அமரன் இயக்குநராக அறிமுகமான கோழி கூவுது படத்தில் பிரபு, சில்க் ஸ்மிதா ஆகியோருடன் விஜியும் நடித்திருந்தார். இதுதான் அவரது முதல் படம்.
இந்தப் படத்தில் சுரேஷிற்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் இடம் பெற்ற ஏதோ மோகம் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸானது. அதன் பிறகு அவரது அழகு மற்றும் இளமையின் காரணமாக அடுத்தடுத்து ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். ரஜினி, மோகன் லால் என்று மாஸ் ஹீரோக்களுக்ளுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் விஜிக்கு ஹீரோயின் வாய்ப்பு குறையவே குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும், கானா பாடல்களுக்கும் டான்ஸ் ஆடினார். அப்படி தான் சரத்குமாரின் சூரியன் படத்தில் இடம் பெற்ற லாலாக்கு டோல் டப்பி மா என்ற பாடலும் சரி, பூவே உனக்காக படத்தில் இடம் பெற்ற மச்சினிச்சி வர்ற நேரம் என்ற பாடலும் சரி விஜிக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.
இந்தப் பாடலில் ஆடும் போது அவருக்கு முதுகு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த அறுவை சிகிச்சையால் கை மற்றும் கால் பாதிக்கப்பட்ட நிலையில் வீல் சேரிலேயே வாழ்க்கையை நடத்தும் அளவிற்கு தள்ளப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்று பிற்கு மீண்டும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு உடல் நலத்தை மீட்டார். எனினும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சிம்மாசனம் தான் விஜியின் கடைசி படம். இதில், ஒரு விஜயகாந்திற்கு மனைவியாகவும், மற்றொரு விஜயகாந்திற்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.

சினிமாவிற்கு வரும் போது அவருக்கு வயது 17. ஆனால், 34 வயதிலேயே அவரது சினிமா வாழ்க்கை மட்டுமின்றி அவரது நிஜ வாழ்க்கையும் முடிந்துவிட்டது. ஆம், 2000ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை முடிவுக்கு உடல்நலம் தான் காரணமாக சொல்லப்பட்ட நிலையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் தான் அவரது மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்தியது. அப்படி அவர் எழுதி வைத்திருந்தது காதல் பற்றி தான். சினிமா வாய்ப்பு இல்லாத போது சீரியல் பக்கம் சென்ற விஜிக்கு சீரியல் இயக்குநர் மீது காதல் ஏற்பட்டது. ஆனால், அந்த இயக்குனருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தையும் இருந்துள்ளது.
அதை மறைத்து தான் விஜியை காதலித்து அவரை ஏமாற்றியிருக்கிறார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி வாக்குறுதி அளித்த நிலையில் ஏமாற்றிவிட்டார் என்றும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த இயக்குநர் மட்டுமின்றி அவரது மனைவியையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்திருந்தது. சில வருடங்களுக்கு பிறகு தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மற்றொரு விஷயமாக உடற்கூராய்வு செய்யாமல் தனது உடலை ஒப்படைக்க வேண்டும் என்று அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு கோரிக்கை வைத்திருந்தார். இந்த 2 விஷயங்கள் தான் விஜியின் தற்கொலைக்கான குறிப்பில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





















