மேலும் அறிய

என்னிடம் 33 கார்கள் உள்ளன: பெருமைபட்ட பாக்ஸர் ஆண்ட்ரூவுக்கு பதிலடி கொடுத்த சூழல் ஆர்வலர் க்ரேட்டா..

தன்னிடம் 33 கார்கள் இருப்பதாக பெருமை பீற்றிக் கொண்ட முன்னாள் தொழில்முறை கிக் பாக்ஸர் ஆண்ட்ரூ டெடேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சூழலியல் ஆர்வர்லர் கிரெட்டா துன்பெர்க்.

தன்னிடம் 33 கார்கள் இருப்பதாக பெருமை பீற்றிக் கொண்ட முன்னாள் தொழில்முறை கிக் பாக்ஸர் ஆண்ட்ரூ டெடேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சூழலியல் ஆர்வர்லர் கிரெட்டா துன்பெர்க்.

ஆண்ட்ரூ தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெலோ கிரெட்டா என்னிட்டம் 33 கார்கள் உள்ளன. அவற்றின் விவரம் வேண்டுமென்றால் உங்கள் இமெயில் சொல்லுங்கள் அனுப்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார். கூடவே எனது புகாட்டி கார் w16 8.0L quad turbo இன்ஜின் உள்ளது. எனது இரண்டு ஃபெராரி கார்களிலும் 6.5L v12s இன்ஜின் உள்ளது. நீங்கள் உங்கள் இமெயில் முகவரி தந்தால் சூப்பர் எமிஷன் கார்கள் பற்றி விவரமாக அனுப்பிவைப்பேன் என்று சீண்டி இருந்தார்.

அதற்கு கிரெட்டா துன்பர்க் “yes, please do enlighten me. email me at smalld***energy@getalife.com.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சூசகமாக கேவலமான வார்த்தைகளால் ஆண்ட்ரூவை வசை பாடியுள்ளார் கிரெட்டா.

யார் இந்த கிரெட்டா துன்பெர்க்?

ஸ்வீடனைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் கிரெட்டா தன்பெர்க். அவ்வளவு தானா என்றால் இல்லை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் தனது 16 வயதிலேயே உலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் கிரெட்டா/

ஆட்டிசத்தின் ஒருவகையான அஸ்பெர்கர் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இதன் காரணமாக கிரெட்டாவால் சமூகத்துடன் ஒன்றுபடாமலும், தான் நினைத்தவற்றை முழுமையாக வெளிப்படுத்த முடியாமலும் இருந்து வந்தார்.

இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் ஆபத்தமான விளைவுகள், விலங்குகள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு எப்படி செய்திகளாக ஒவ்வொரு நாளும் வருகிறதோ அவ்வாறு கிரெட்டாவுக்கு அவரது பள்ளி வகுப்பில் அவரது ஆசிரியர்கள் மூலம் வந்தடைந்தது. ஆனால் நம்மைப்போல் அதை வெறும் செய்தியாக கிரெட்டா கடந்துவிடவில்லை. பூமியின் வெப்பநிலை உயர்வால் பலியான பனிக்கரடி புகைப்படங்களும், பிளாஸ்டிக்கில் குப்பைகளால் நிரம்பிய கடலின் புகைப்படங்களும் கிரெட்டாவை மிகவும் பாதித்தன.

கிரெட்டாவால் அந்தப் பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை. காலநிலை மாற்றத்துக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்ப கிரெட்டா முடிவெடுத்தார். இதற்கு அவரது குடும்பமும் முழு ஆதரவு அளித்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ‘காலநிலையைக் காக்க பள்ளி வேலைநிறுத்தம்’ என்று பதாகையுடன் தனி மனிதியாக ஸ்வீடன் நாடாளுமன்றம் முன் அமர்ந்தார் கிரெட்டா. ’Fridays For Future’ என்று பெயரிடப்பட்டு கிரெட்டா தொடங்கிய இப்போராட்டம் இன்று அவரது தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து காலநிலையைக் காக்க வேலைநிறுத்தப் பேரணியில் ஈடுபட வைத்தது. மேலும், காலநிலை மாற்றம் பற்றியும் அதனால ஏற்படும் தீமைகளை இளம் தலைமுறையினரிடையே ஆக்கபூர்வமான உரையாடல் ஏற்படக் காரணமானது. இதன் மூலம் நூற்றாண்டின் காலநிலை மாற்றம் குறித்த குறியீடாக மாறினார் கிரெட்டா துன்பெர்க். எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் தன்னிடம் 33 கார்கள் இருப்பதாக பெருமை பீற்றிக் கொண்ட முன்னாள் தொழில்முறை கிக் பாக்ஸர் ஆண்ட்ரூ டெடேவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சூழலியல் ஆர்வர்லர் கிரெட்டா துன்பெர்க்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
Tvk vijay: விஜய்க்கு தலைவலியை தரும் புஸ்ஸி.ஆனந்த் ; விக்கிரவாண்டியில் மீண்டும் வெடித்த சர்ச்சை
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
24 மணி நேரமும் மதுபானக்கூடம் செயல்படுவதாக கூறி வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி  கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
Kapil dev net worth : 10 கோடி மதிப்புள்ள சொகுசு கார்கள்.. முதல் உலகக்கோப்பை வெற்றி கேப்டனின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
Embed widget