மேலும் அறிய
50 வகையில் கமகம விருந்து.. மதுரை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் சைவம், அசைவம் உணவுகள் தூள் !
சிறப்பு அழைப்பாளர்கள் திமுகவினர் என 10000 மேற்பட்டவர்களுக்காக உணவு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

திமுக பொதுக்குழுவில் உணவு
Source : whats app
மதுரை திமுக பொதுக்குழு கூட்டம் 25 வகை சைவ - 25 வகை அசைவ உணவுகள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சமையல் தொழிலாளர்கள் - கம கமக்கும் விருந்துக்கு தயாராகி வரும் பொதுக்குழு திடல்*
மதுரையில் நடைபெறும் தி.மு.க., பொதுக்குழு
49 ஆண்டு காலத்திற்குப் பிறகு இன்று ஜூன்-1 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 3000 பொதுக்குழுஉறுப்பினர் முன்னிலையில் 2026-தேர்தல் குறித்து அறிவிப்பு மற்றும் முக்கிய தீர்மானங்கள் உள்ளிட்டவைகளை நிறைவேற்றப்பட்ட உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் என்ன தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர் என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் இடையே நிலவி வருகிறது. பொதுக்குழு கூட்டம் வெற்றி பெறுவதற்கும் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என அமைச்சர் மூர்த்தி தினமும் காலை., மாலை., இரவு என பொதுக்குழு கூட்டம் நடைபெறும் உத்தங்குடி பகுதியில் பம்பரமாய் சுழன்று பணி செய்தனர். அவருடன் அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர மாவட்ட செயலாளர்கள் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட திமுக முக்கிய பொதுக்குழு நிர்வாகிகள் மும்முரமாய் பணியாற்றினர். இந்நிலையில் மதுரை திமுக பொதுக்குழு கூட்டம் துவங்கியுள்ள நிலையில் மதிய உணவிற்கு 25 வகை சைவ - அசைவ உணவுகள் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
சைவம் - அசைவ உணவு
பொதுக்குழு மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் திமுகவினர் என 10000 மேற்பட்டவர்களுக்காக உணவு தயாரிக் நூற்றுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களுக்காக மட்டன் எண்ணெய் சுக்கா, மட்டன் உப்புக்கறி, கோலா உருண்டை, மட்டன் ஒயிட் குருமா, வஞ்சரம் மீன் வருவல், நாட்டுக்கோழி மிளகு கறி, சிக்கன் 65, ஆம்லெட், மட்டன் பிரியாணி, எலும்பு குழம்பு, அயிரை மீன் குழம்பு, ஜிகர்தண்டா பீடா மலை வாழைப்பழம் என 25 க்கும் மேற்பட்ட அசைவ உணவு மற்றும் சைவ உணவு வகைகளான கதம்ப பொரியல், உருளைக்கிழங்கு காரக்கறி, சைவ சிக்கன் வறுவல், சைவ மீன் ப்ரை, சிப்பி காளான் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு என 25க்கும் மேற்பட்ட சைவ உணவு தயார் செய்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















