Crime: தகாத உறவு, பற்றி எரிந்த சந்தேகம் - தீயில் பாதி கருகிய கணவனின் உடல் , ஸ்கெட்ச் போட்ட மனைவி?
Crime: தகாத உறவை கொண்டிருந்த மனைவி கணவனை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.

Crime: எதிர்பாராத விபத்தாக கருதப்பட்ட சம்பவம் விசாரணையில் கொலை என அம்பலமாகியுள்ளது.
எரித்துக்கொல்லப்பட்ட கணவர்:
ஒடிசாவின் நயாகர் பகுதியில் வனக்காவலர் சிஷிர் குமாரின் மரணம் இறுதிக்கட்டத்தில் யாரும் எதிர்பாராத பரபரப்பான திருப்பங்களை கண்டுள்ளது. அவரது சகோதரர் சரத் குமார் அளித்த புகாரின் பேரில் மேற்கொண்ட விசாரணையில், தகாத உறவு விவகாரத்தில் மனைவியே கணவனை கொன்றது அம்பலமாகியுள்ளது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கருதப்பட்ட நிலையில், இது திட்டமிடப்பட்ட கொலையாக சந்தேகிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டு என்ன?
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சரத் குமார், “எனது சகோதரர் கொல்லப்பட்டு பின்பு வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கொலையை விபத்தாக மாற்ற முயற்சித்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார். வெளியான தகவல்களின்படி, தங்களது திருமணத்தையும் மீறி கணவர் சிஷிர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக, மனைவிக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்துள்ளது. அவ்வப்போது அவர்கள் இடையே இதனால் வாக்குவாதம் மற்றும் சண்டையும் அரங்கேறியுள்ளது. இதனால் இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பொறாமை மற்றும் துரோகம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்தது என்ன?
பன்சிர்டா பகுதியில் வனக்காவலராக பணியாற்றி வந்த சிஷிர், பரமசிதந்த பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். வாடகை வீட்டில் வசித்து வந்த இவர்களுக்கு நமிதா மற்றும் அபிஷேக் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவம் நடந்த கடந்த வியாழனன்று, இரவு நள்ளிரவில் வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. மகள் நமிதா உதவிக்கோரி அக்கம்பக்கத்தினரை நோக்கி ஓடியுள்ளார். வீடு முழுவதும் பரவிய தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் வருவதற்குள் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
தீயை அணைத்த பிறகு வீட்டிற்குள் சென்றபோது, படுக்கையறையில் பாதி எரிந்த நிலையில் சிஷிரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரின் மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மகனுக்கு பெரிதாக காயம் ஏதும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், தீ பற்றியது எப்படி என்பதே பதிலிள்ளாத கேள்வியாக தொடர்கிறது.
விசாரணை தீவிரம்:
புகார் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிஷிரின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் சம்பவத்தன்று நடந்தது என்ன என்பதை போலீசார் துல்லியமாக கேட்டறிந்து வருகின்றனர். அக்கம்பக்கத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட உடலில், ஏதேனும் காயங்கள் இருக்கின்றனவா? என்ற ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.





















