அவங்க என்ன வேணும்னா செஞ்சாங்க? - ரஷ்ய தாக்குதலில் கையை இழந்த உக்ரைன் சிறுமியின் நெகிழ வைத்த பேச்சு..!
9 வயது சாஷாவின் குடும்பத்தின் கார் மீது ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவரது தந்தை கொல்லப்பட்டார்.
தனது அப்பாவைக் கொன்ற ரஷ்ய தாக்குதலில் ஒரு கையை இழந்த உக்ரேனிய சிறுமி, புடினின் படைகள் தன்னை காயப்படுத்த நினைக்கவில்லை என்று நம்புவதாக கூறினார்.
உக்ரைனில் சாஷா என்ற சிறுமி கீவ் நகரில் இருந்து தப்பிச் சென்றபோது, ரஷ்யப் படையினர் சிறுமியின் குடும்பத்தினரை சுட்டுக் கொன்றதை அடுத்து, கையை இழந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
ரஷ்ய படைகள் சிறுமியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவரது அப்பா படுகொலை செய்யப்பட்டார். குடும்பத்தின் மீதமுள்ளவர்கள் ஒரு பாதாள அறையில் ஒளிந்து கொண்டனர்.
தாக்குதலில் காயமடைந்த 9 வயது சிறுமி சாஷாவை ஓரிரு நாட்களுக்குப் பிறகு, துணிச்சலான தன்னார்வலர்கள் வெள்ளைக் கொடியை அசைத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் இருந்த சிறுமி கூறுகையில், “ரஷ்யர்கள் என்னை ஏன் சுட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு விபத்து என்றும் அவர்கள் என்னை காயப்படுத்த நினைக்கவில்லை என்றும் நம்புகிறேன்.
“என் சகோதரியின் பின்னால் ஓடும் போது, என் கையில் சுட்டார்கள் அப்போது நான் சுயநினைவை இழந்தேன். யாரோ என்னை பாதாள அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிலர் என்னை ஒரு துண்டுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என்று கூறினார்.
அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விளாடிஸ்லாவ் கோர்போவெக், சாஷாவின் இடது கையை முழங்கைக்கு மேல் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தன்னார்வ மொபைல் மருத்துவமனையின் டாக்டர் ஜெனடி ட்ருசென்கோ, சாஷா, அவரது சகோதரி மற்றும் அவரது அம்மா இரண்டு நாட்கள் பாதாள அறையில் தஞ்சம் அடைந்ததாகக் கூறினார்.
இன்னும் பல குழந்தைகளும் பயங்கரமான காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் குறைந்தது ஒரு பெற்றோரையாவது இழந்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. சாஷாவுக்கு சிகிச்சை அளித்த ஒரு செவிலியர், தன்னைக் காப்பாற்றியதற்கும், பராமரித்ததற்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும், அவளது கொடூரமான நிகழ்வுகளுக்கு பிறகும் அழவில்லை என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்