UAE Golden Visa: 10 வருடங்களுக்கான ஜாக்பாட் - 9 பாடங்கள், லட்சங்களில் கொட்டும் ஊதியம், எங்கு? எப்படி?
UAE Golden Visa: மாணவர்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பாக ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசா உருவெடுத்துள்ளது.

UAE Golden Visa: ஐக்கிய அரபு அமீரகத்திக்ன் கோல்டன் விசா அந்நாட்டில் வேலை செய்யவும், உயர்கல்வி பயிலவும் 10 ஆண்டுகளுக்கு வாய்ப்பளிக்கிறது.
UAE கோல்டன் விசா:
ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் கோல்டன் விசா பல்வேறு தரப்பினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அறிவியல்,பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு 10 ஆண்டுகள் அந்நாட்டில் வசிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு இரண்டு விதிகள் கட்டாயமாக பின்பற்றப்படுகின்றன. அதன்படி,
- நிர்ணயிக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படித்தவர்கள்
- குறிப்பிட்ட 9 பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு கோல்டன் விசா சலுகை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஐக்கிய அமீரகத்தில் தங்கி 10 ஆண்டுகளுக்கு வேலை செய்யலாம் அல்லது உயர்கல்வியை பெறலாம்.
கல்வி அடிப்படையில் யாருக்கு கோல்டன் விசா கிடைக்கும்?
கல்வி பிரிவு அடிப்படையில் உலகின் எந்த நாட்டைச் சேர்ந்த மாணவருக்கும் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டியது அவசியம். அதில் அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். டிகிரி முடித்தன் அடிப்படையில் கோல்டன் விசாவைப் பெற 9 வகையான பாடங்களில் நீங்கள் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அதன்படி, செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, தொற்றுநோயியல் மற்றும் வைராலஜி, கணினி பொறியியல், உயிரி தொழில்நுட்ப பொறியியல், மின்னணு பொறியியல், மென்பொருள் பொறியியல், மின் பொறியியல், மரபியல் மற்றும் மூலக்கூறு பொறியியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் கோல்டன் விசா வழங்கப்படுகிறது.
பழைய மாணவர்களுக்கு பொருந்துமா?
படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது. டிகிரியை முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். அதேநேரம், இறுதியாண்டு படிப்பவர்கள் தங்களது கொல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். தேவையான ஆவணங்களை தயார்படுத்திக் கொள்வதோடு, உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் இருந்து 3.5 அல்லது அதற்கு மேற்பட்ட GPA மதிப்பெண்களை பெற்று இருக்க வேண்டும்.
UAE அறிவிப்பின்படி முதல் 10 பல்கலை.,
- MIT - அமெரிக்கா
- ஸ்டான்ஃபோர்ட் பல்கலை., - அமெரிக்கா
- ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை - இங்கிலாந்து
- ஹார்வர்ட் பல்கலை - அமெரிக்கா
- கேம்ப்ரிட்ஜ் பல்கலை - இங்கிலாந்து
- கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி - அமெரிக்கா
- ETH ஜுரிச் ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி - சுவிட்சர்லாந்து
- யுனிவெர்சிட்டி காலேஜ் லண்டன் - இங்கிலாந்து
- இம்பீரியல் காலேஜ் லண்டன் - இங்கிலாந்து
- யுனிவெர்சிட்டி ஆஃப் சிகாகோ - அமெரிக்கா
ஆகிய பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
கோல்டன் விசாவிற்கு விண்ணப்பிக்க மாணவர் தகுதி பெற்று இருந்தால், அவர் தனது கையில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட கிராட்சிவேசன் சர்டிபிகேட்டை கொண்டிருக்க வேண்டும். GPA ட்ரான்ஸ்கிரிப்ட் மற்றும் பல்கலைக்கழகத்தின் பரிந்துரை கடிதமும் அவசியம். வெவ்வேறு மொழிகளில் ஆவணங்கள் வழங்கப்பட்டு இருந்தாலும், அவை காட்டாயமாக அரபிக் மொழியில் மொழிபெயர்த்து இருக்க வேண்டும்.
கோல்டன் விசாவின் பயன்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா எந்த ஸ்பான்சரும் இல்லாமல் நாட்டிற்குள் நுழைய உங்களை அனுமதிக்கிறது. இங்கு சென்றதும், நீங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம், வேலை செய்யலாம் மற்றும் படிக்கலாம். இது மட்டுமல்ல, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடைவார்கள். திறமையானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து வாழ்ந்து, தங்கள் நாட்டின் புதுமை மற்றும் தொழில்நுட்பத்திற்கு பங்களிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் இந்தியாவை காட்டிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு பணிகளுக்கான ஊதியமும் அதிகமாகும். நிர்ணயிக்கப்பட்ட விதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு கோல்டன் விசா நீட்டிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.




















