Russia-Ukraine War: ரொட்டிக்காக நின்ற 10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யா - அமெரிக்க தூதரகம் பரபரப்பு குற்றசாட்டு..!
ரொட்டிக்காக நின்ற உக்ரைன் வாசிகளை ரஷ்யா சுட்டுக்கொன்றுள்ளதாக உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதகரம் குற்றம் சாட்டி உள்ளது.
ரொட்டிக்காக நின்ற உக்ரைன் வாசிகளை ரஷ்யா சுட்டுக்கொன்றுள்ளதாக உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதகரம் குற்றம் சாட்டி உள்ளது.
இது குறித்து அமெரிக்க தூதரகம் கூறும் போது, “ உக்ரைன் செர்னிவ் நகரில் ரொட்டிக்காக நின்ற 10 பேரை ரஷ்யா சுட்டு கொன்றிருக்கிறது. இதுபோன்ற கொடூரமான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைனில் நடக்கும் எந்த ஒரு குற்றத்தையும் பதிவு செய்யும் வகையில், எங்களால் முடிந்தவரை எங்களுக்கு இருக்கும் எல்லா வழிகளிலும் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்." என்று கூறியுள்ளது.
நாளுக்கு நாள் தீவிரமடையும் போர்
ரஷ்யா - உக்ரைன் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில், உக்ரைனில் உள்ள மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ளிட்டவை உருகுலைந்து காணப்படுகின்றன. உக்ரைனை சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யா தற்போது தலைநகர் கீவை நெருங்கி இருக்கிறது. தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பலர் பதுகிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.
இதனிடையே ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. உக்ரைன் தரப்பில் அன்டன் கோரினெவிச் பேசும் போது, “ உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார். ட்ட விரோத தாக்குதல்களை முன்வைத்து வரும் ரஷ்யா, போர் விதிகளை மீறி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில் இன்று சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவை போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இது குறித்து உக்ரைன் அதிபர் கூறியதாவது: -
சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிரான வழக்கில் ரஷ்யா முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் மீதான தனது படையெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது. இந்த உத்தரவு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது. ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவை புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும்” என்று அவர் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்