UPSC: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஜூன் 25 கடைசி! எப்படி?
UPSC Registration 2025: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது. தேர்வர்கள் upsconline.nic.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 25ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது. தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் முதன்மைத் தேர்வுக்கு 14,161 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வு எழுதத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஜூன் 17) தொடங்கி உள்ளது. தேர்வர்கள் upsconline.nic.in என்ற இணையதள முகவரியில் ஜூன் 25ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் முதன்மைத் தேர்வுகள் தொடங்குகின்றன. தொடர்ந்து 5 நாட்களுக்கு இந்தத் தேர்வுகள் நடக்கின்றன.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
பொதுப் பிரிவு மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமாக 200 ரூபாயை செலுத்த வேண்டும். எனினும் எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளி மாணவர்கள், மாணவிகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை.

முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? ( UPSC CSE Mains 2025: How To Apply)
- UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான upsc.gov.in அல்லது https://upsconline.nic.in/ என்ற முகவரியைப் பார்வையிடவும்.
- அதில் உள்ள விரிவான விண்ணப்பப் படிவ (DAF) இணைப்பை க்ளிக் செய்யவும்.
- முதற்கட்ட விண்ணப்பச் செயல்முறையின்போது உருவாக்கப்பட்ட பதிவு ஐடி மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- பெயர், பிறந்த தேதி மற்றும் சாதி ஆகிய தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
- கல்வி விவரங்களை உள்ளிட்டு, தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள், வேலையின் பெயர், விளக்கம், நிறுவனத்தின் பெயர், கால அளவு மற்றும் பொறுப்புகள் உள்ளிட்ட விவரங்களை வழங்கவும்.
- பொழுதுபோக்குகள் மற்றும் சாதனைகள் போன்ற கூடுதல் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம் மற்றும் செல்லுபடியாகும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடி உள்ளிட்ட தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- இறுதி சமர்ப்பிப்புக்கு முன், பதிவு செய்யப்பட்ட அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்க்கவும்.
- விண்ணப்பக் கட்டணத்துடன் DAF ஐச் சமர்ப்பிக்கவும் (பொருந்தினால்).
கூடுதல் விவரங்களுக்கு: https://upsconline.nic.in/






















