மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மொழி தொடர்பான கமலின் கருத்திற்கு மன்னிப்பு கேட்கச் சொல்ல கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு என்ன உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

கமல் கன்னட மொழி சர்ச்சை
தக் லைஃப் ஆடியோ லாஞ்சில் கன்னட மொழி பற்றி நடிகர் கமல்ஹாசனின் கருத்து பரவலாக சர்ச்சையானது. கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகும் என கன்னட திரைப்பட சங்கம் கூறியது. இதனைத் தொடர்ந்து படத்தை பாதுகாப்பாக வெளியிட கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் கமக். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கமலை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியது. தான் தவறாக பேசவில்லை என்றும் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப் பட்டது. அதற்கு தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என கமல் திட்டவட்டமாக தெரிவித்தார்.மேலும் கன்னட திரைப்பட சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கைக்கு வந்த பின்பே கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும் என தீர்மானமானது
கமலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம்
கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடுவது குறித்தான வழக்கு இன்று உச்ச நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. " கமல் மொழி பற்றி சொன்ன கருத்து என்றால் அதை அறிவார்ந்த தரப்பினர் அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சென்சார் சான்றிதழ் பெற்ற ஒரு படத்தை வெளியிட தடை விதிக்கவோ கமலை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தவோ உங்களுக்கு உரிமை கிடையாது" என உயர் நீதிமன்றத்தை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கமளிக்க நாளை வரை அவகாசம் வழங்கியுள்ளது நீதிமன்றம். தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் உரிய பாதுகாப்புடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது"
It's none of HC Business : Justice #Nagaprasanna of Karnataka who ordered Kamalhaasan to issue apology and banned #Thuglife movie from screening in Karnataka being slammed by Supreme Cout, stating clearly that Karnataka HC went overboard.
— RajKamal (@Suryadev2004) June 17, 2025
Finally Justice Nagaprasanna had to do… pic.twitter.com/Tl37T20dI0





















