சீமானுக்கு பிடி வாரண்ட்; அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆமாம்... நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும்.

விழுப்புரம்: அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராகாத நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விக்கிரவாண்டி நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதுாறாக பேசிய வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்திரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், கஞ்சனுார் போலீ சில் புகார் செய்தார்.
இந்த வழக்கு கடந்தாண்டு அக். 18ம் தேதி விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் கோர்ட்டில் ஆஜரானார். அதன்பின் இரு முறை நடந்த வழக்கு விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை. ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. சீமான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவரது சார் பில் மனு தாக்கல் செய் யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய நீதி பதி சத்தியநாராயணன், அந்த மனுவை தள்ளுபடி செய்து, சீமானுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது கஞ்சனூர் அருகேயுள்ள நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சீமான், “ஆமாம்... நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

