Annamalai on Vijay : நடிகர் விஜயின் CBSE பள்ளி., தலையில் அடித்து கொண்ட அண்ணாமலை
இந்தியை எதிர்க்கும் விஜய் ' விஜய் வித்யாஸ்ரம் ' எனும் பெயரில் சிபிஎஸ்இ பள்ளி நடத்தி வருகிறார். பள்ளியின் இடம் எஸ்.ஏ.சந்திரசேகர் அறக்கட்டளை பெயரில் உள்ளது

*"மும்மொழிக் கொள்கை வேண்டுமா..வேண்டாமா..? என்பது குறித்து மார்ச் 1 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வீடுவீடாக சென்று பாஜக சார்பில் கணக்கெடுப்பு நடத்தி கணக்கெடுப்பு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும்" என அண்ணாமலை தெரிவித்தார்சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அண்ணாமலை பேட்டி:
அப்போது பேசிய அவர் ”தர்மேந்திர பிரதான் காசி தமிழ்ச்சங்கத்தில் பேசியதை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். இந்தி திணிப்பு என இண்டி கூட்டணி தற்போது தமிழகத்தில் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறது. இந்தியை பாஜக எங்கேயும் திணிக்காது
புதிய கல்விக் கொள்கை குறித்த கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை மூன்றாவது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றது. ஆனால் ஜூன் 3 , 2019 ல் மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்கலாம் என பிரதமர் மாற்றினார்.
தமிழகத்தில் 52 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியிலும் , 56 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களை தமிழ் ஆங்கிலம் என இரு மொழியை மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்
தனியார் பள்ளிகளின் மார்க்கெட் மதிப்பு 30 ஆயிரம் கோடியாக உள்ளது. 2016 ல் சீமானது தேர்தல் வாக்குறுதியில் ஆங்கிலம் கட்டாயப் பாடமொழியாக இருக்க வேண்டும் என்றும் இந்தி உள்ளிட்டவை விருப்ப மொழியாக இருக்கலாம் என்றும் உள்ளது
விஜயை சாடிய அண்ணாமலை:
சில அரசியல் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி உள்ளது. இந்தியை திணிக்க கூடாது என்று கூறும் நடிகர் விஜய் , ' விஜய் வித்யாஸ்ரம் ' எனும் பெயரில் படூரில் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருகிறார். அந்த பள்ளியின் ஆவணத்தில் சி. ஜோசப் விஜய் என்ற பெயர் உள்ளது , அந்த பள்ளியின் இடம் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு 35 ஆண்டுகாலம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் , சீமான் , அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழியை படிக்க கூடாது என்கின்றனர். தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் கிடையாது. தமிழகத்தில் 30 லட்சம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மும்மொழிக் கல்வி பயில்கின்றனர்
அதை நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என தமிழக அரசு கூறுவது வெட்கக் கூடாக உள்ளது. எத்தனை ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசிடம் உள்ளனர் ? மும்மொழி கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை அவர்கள் மூலம் தமிழக அரசு ஏன் வெளியிடவில்லை? தனியார் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
சீமான் , விஜய் போன்றவர்களின் குடும்பத்திற்கு ஒரு நியாயம் , அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நியாயாமா..?மும்மொழி கொள்கையில் ஒரே ஒரு மொழித்தாள் பாடம் மட்டுமே மூன்றாவது மொழியில் இருக்கும் , மற்ற அனைத்துப் பாடமும் ஆங்கிலத்தில்தான் இருக்கும்.அரசுப் பள்ளியில் தமிழ் படித்த எத்தனை பேர் பிற மாநிலங்களில் வேலையில் இருக்கின்றனர். தங்களது பிள்ளைகள் மட்டும் நன்றாக படிக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் நாடகம் நடத்துகின்றனர். அன்பில் மகேஷ் தனது மகனை மட்டும் பிரெஞ்ச் படிக்க வைக்கிறார். அரசுப் பள்ளி மாணவர் எண்ணிக்கையை விட தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தமிழகத்தில் இருமொழி கொள்கை தோற்றுள்ளது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
அண்ணாவை மேற்க்கோள்காட்டிய அண்ணாமலை:
அண்ணாவே கூறியுள்ளார் , அனைத்து மாநிலங்களும் இந்தியை ஏற்றால் அப்போது நாங்களும் ஏற்க தயார் எனவும் மார்ச் 1 ம் தேதி முதல் மே மாதம் வரை 90 நாடுகளுக்கு தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்.ம்மூன்றாவது மொழி வேண்டுமா..? வேண்டாமா..? மூன்றாவது மொழி வேண்டும் என்றால் எந்த மொழி வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தி கணக்கெடுக்க உள்ளோம்.
அதன்பிறகு குடியரசுத் தலைவரை சந்தித்து அந்த அறிக்கையை வழங்குவோம். கண் முன்னால் ஒரு தலைமுறையை அழித்து வருகின்றனர் , வீடு வீடாக சென்று கையெழுத்து இயக்கம் நடத்தி கணக்கெடுப்பு நடத்த உள்ளோம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் வேண்டும் என அன்பில் மகேஷ் நாளை காலை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினால் நாளை மாலையே கல்வித்துறை அமைச்சரை சந்தித்து நான் அதை வலியுறுத்த தயாரக உள்ளேன். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் புதிய கல்விக் கொள்கை அமலாகி வருகிறது .
தமிழக கே.வி பள்ளிகளில் மூன்றாவது மொழியாக தமிழை பயிற்றுவிக்கத் தயார். தமிழகத்திற்கு மேலும் 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை கொண்டுவர நினைக்கிறோம் , அன்பில் மகேஷ் அதை ஏற்றுக் கொள்வாரா..?
ஏன் தமிழ் கட்டாயம் ஆக்கப்படவில்லை...?
நான் அமைச்சரான பிறகு வேண்டுமானால் இந்தியாவில் பிற மாநில கே.வி பள்ளியில் எத்தனை பேர் தமிழ் படிக்கின்றனர் என்ற தகவலை வெளியிடுகிறேன். இப்போது அந்த கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. தனி நபராக எனக்கு கிடைக்கும் பொதுப்படையான தகவலை மட்டுமே பகிர்கிறேன்...
மெட்ரிக் பள்ளியில் ஏன் தமிழ் கட்டாயம் ஆக்கப்படவில்லை...? இந்தி படிக்க வேண்டும் என பாஜக எங்கேயும் கூறவில்லை , மூன்றாவது மொழி படியுங்கள் என்றுதான் கூறுகிறோம். மூன்றாவது மொழி எது என்பதை மாணவர்களும் , பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுமே முடிவு செய்ய முடியும் , மாநில அரசு முடிவு செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் கே.வி பள்ளிகளில் 85 சதவீதம் பேர் தமிழர் அல்லாத மாணவர்கள் படிக்கின்றனர் மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் அங்கு பயில்கின்றனர் , சில ஆண்டுகளில் பிற மாநிலங்களுக்கு அவர்கள் மாறுதலாகி சென்று விடுவர். எனவே தமிழ் பாடத்தை 12ம் வகுப்பு வரை நடத்த முடிவதில்லை. தங்கள் குழந்தைகள் தமிழ் படிக்க வேண்டும் என்றால் கே.வி பள்ளிக்கு பதிலாக அரசுப் பள்ளியில் குழந்தைகளை பெற்றோர் சேர்த்துக் கொள்ளலாம்.
2026 சட்ட மன்றத் தேர்தலில் மும்மொழிக் கல்வியை தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கையாக வெளியிட உள்ளோம். தமிழ்நாட்டில் மக்கள் மும்மொழிக் கொள்கைக்கு தயாரானதால்தான் தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை வேண்டாம் என்றால் சிபிஎஸ்இ , மெட்ரிக் பள்ளிகளை தமிழக அரசு தடை செய்யலாமே..?- தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏஐ மூலமே மொழி பெயர்ப்பு செய்து கொள்ள முடியுமே என்று கேட்கிறீர்கள்.மாநில எல்லையை தாண்டினால் பிற மொழியில் பேசித்தான் டீ கபி உள்ளிட்ட உணவுப் பொருட்களை கூட வாங்க முடியும் (( என குறிப்பிடும் வகையில் இந்தியிலும் ,கன்னடத்திலும் பேசி பதில் அளித்தார் அண்ணாமலை))
பல மொழிகள் படிப்போரின் திறன் அதிகரிக்கும் என்பது குறித்த தரவுகளுடன் நான் செய்தியாளர்களை சந்திக்க தயார். பீகார் மாநிலத்தவர்கள் இரண்டு மூன்று மொழி பேசுபவர்கள் , அவர்கள் இந்தி படித்துவிட்டு இங்கு வேலைக்கு வருவதாக கூறுவது தவறு.
இதையும் படிங்க: Seeman : பைத்தியக்காரத்தனம்..! அண்ணாமலையை வெளுத்து வாங்கிய சீமான்
முதலமைச்சர் முயற்சி எடுத்தாரா?
தமிழ் ஆசிரியர்களை பிற மாநிலங்களுக்கு அனுப்ப முதலமைச்சர் முயற்சி எடுத்தது உண்டா..? புதிய கல்விக் கொள்கையில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை தமிழில் மட்டும்தான் படிக்க முடியும். நாளை காலையே 5 ஆயிரம் தமிழ் ஆசிரியர்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு வழங்கத் தயாரா..? இண்டி கூட்டணி பண்டப் பரிமாற்றம் போல தமிழ் ஆசிரியர்களை இந்தி பேசும் மாநிலங்களுக்கு அனுப்பலாமே..?
தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் இந்தி மொழிப் பாடம் இருக்கும் என 1965 முதல் தமிழ்நாடு மட்டும்தான் கூறிக் கொண்டிருக்கிறது.2019 வரை இந்தியாவில் இந்தி கட்டாய மொழியாகத்தான் இருந்தது , மோடிதான் அதை விருப்ப மொழியாக மாற்றினார்.
மத்திய அரசுக்கு தமிழ் ஆசிரியர்களை வழங்கி தமிழக கே.வி பள்ளியில் தமிழை கட்டாயமாக்குமாறும் அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை விடுக்கலாம்.. போதுமான தமிழ் ஆசிரியர்கள் இல்லாததே கே.வி பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படாததற்கு காரணம். உத்தர பிரதேசம் , பீகார் மாநிலங்கள் தமிழ்நாட்டைவிட கல்வித்தரத்தில் மேலே இருக்கிறது.
இதையும் படிங்க: Multispeciality hospital : ரூ.60 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை; எங்கு தெரியுமா ?
படிக்கும் திறன் அதிகரிக்கும்:
புதிய கல்விக் கொள்கை வந்தால் தமிழக மாணவர்களின் தமிழ் படிக்கும் திறன் அதிகரிக்கும். தமிழகத்தில் பல அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் சரியாக படிக்கத் தெரியவில்லை. பல வகையில் பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது , சமக்ர சிக்ஷா நிதி மட்டும்தான் பள்ளிக் கல்விக்கான நிதியா...?
தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவோம் என்றுதான் கூறினாரே தவிர... குழு அமைத்து அது குறித்து ஆராய உள்ளோம் என்று கூறவில்லை .. குழு அமைத்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஒப்புதல் பெற்று விட்டோம் என்று கூறியுள்ளனர்..
தமிழ்நாட்டிற்கு வரும் மொத்த நிதியையும் மத்திய அரசு நிறுத்தவில்லை , ஒரு திட்ட நிதியை மட்டுமே நிறுத்தியுள்ளனர் , அதை நிறுத்தியதில் எந்த தவறும் இல்லை .பிரதமரை இழிவுபடுத்தும் விதமாக கார்டூன் வெளியிட்டால் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுப்போம் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

