Chennai Metro: சென்னை மெட்ரோ 2ம் கட்டம், போரூர் ட்ராபிக்கிற்கு குட்பாய் - பூமிக்கு அடியில் 50.5 கிமீ பயணம், 128 ஸ்டேஷன்கள்
Chennai Metro: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 40 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Metro: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மெட்ரோ - 2ம் கட்டம்:
மெட்ரோ ரயில் சேவை போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டபோது, நம்ம ஊருக்கு இதெல்லாம் ஓவர் என பலர் நினைத்தது உண்டு. ஆனால், இன்று அதன் பலனை தினசரி ஆயிரக்கணக்கானோர் அனுபவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தற்போது மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் விதமாக, இரண்டாம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல், புழுதி வீசும் சாலைகள் என பல பிரச்னைகள் எழுந்தாலும், எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பும் அளித்து வருகின்றன.
40% பணிகள் ஓவர்
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 40 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம், மாதாவரம் டூ சிப்காட், ஆயிரம் விளக்கு டூ பூந்தமல்லி மற்றும் மாதாவரம் டூ சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என கூறப்படுகிறது.
திட்டப் பணிகளில் முன்னேற்றம்:
திமுக எம்.பி., கலாநிதி வீராசாமி எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பதிலளித்த ஊரக வளர்ச்சி இணையமைச்சர் தோகன் சாஹு, “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டுமான பணிகள் 40.41 சதவிகிதமும், நிதி பணிகள் 32.74 சதவிகிதமும் முன்னேற்றம் கண்டுள்ளதாக” தெரிவித்தார். இரண்டாம் கட்டத் திட்டத்தில் உள்ள 128 நிலையங்கள் அடங்கிய, 3 வழித்தடங்களிலும் உயர்த்தப்பட்ட மற்றும் நிலத்தடிப் பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இதில் முதலாவது உயர்த்தப்பட்ட பயணப்பாதை என்பது பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான, 9 கிலோ மீட்டர் தூர பாதையாகும்.
இந்த வழித்தடத்தை நடப்பாண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ நிலையம் மற்றும் இருப்பு பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் போரூர் டூ கோடம்பாக்கம் இடையேயான நீட்டிக்கப்பட்ட மெட்ரோ சேவையும் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அண்டர் கிரவுண்ட் டனல் பணிகளில் தாமதம்:
பில்லர்கள் அமைத்து உயரே அமைக்கப்படும் பாதைக்கான பணிகளில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், பூமிக்கு அடியில் அமைக்கப்படும் 50.5 கிமீ தூர பாதையில் 19 கிமீ தூரத்திற்கான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலத்தடி பணிகளை முடிக்க நேரம் எடுக்கும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் நிலத்தடியில் இயங்கும் மாதவரம் டூ சிப்காட் வழித்தடத்திற்கான, நிலையங்களை அமைப்பதற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டியிருந்ததால், பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதன் விளைவாக, இந்த வழித்தடத்திற்கான நிலத்தடி பணிகள் (அண்டர்கிரவுண்ட் டனல்) மற்றும் வழித்தடம் 5-க்கான பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

