“முரட்டுக்காளை; விட்டால் முட்டிவிடுவேன் என்று சொல்வார்; நீங்கள் அமைச்சர் தானே” – போட்டுத்தாக்கிய அண்ணாமலை
வ்வொரு அமைச்சரும் அறிக்கை மேல் அறிக்கை கொடுக்கிறார்கள்.

நான் முரட்டுக்காளை.. விட்டால் முட்டி விடுவேன் என ஒரே டயலாக்கை பேசுகிறார் அமைச்சர் சேகர் பாபு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கிண்டல் அடித்துள்ளார்.
தைப்பூசத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காவடி தூக்கிக்கொண்டு பழனி முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை “ஒவ்வொரு அமைச்சரும் அறிக்கை மேல் அறிக்கை கொடுக்கிறார்கள். போட்டி போட்டுக்கொண்டு அறிக்கை கொடுக்கிறார்கள். தாங்கள் செய்வது சரி என்று சொல்கிறார்கள். சென்னையில் பொதுக்கூட்டம் உள்ளது. எல்லா விஷயத்தையும் அங்கே பேசுவோம்.
அமைச்சர் சேகர் பாபுவை பொறுத்தவரை அவர் எப்படி சபரிமலை செல்கிறார். இங்கே இருந்து தலைமைச் செயலாளருக்கு சொல்லி, விஐபி தரிசனம் மூலமாக தனியாக நின்று ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு வருகிறார். அவருக்கு எப்படி இங்கே மக்கள் அல்லல்படுவது தெரியும்.
சொர்க்கவாசல் ஸ்ரீரங்கத்தில் திறந்தார்கள். சேகர் பாபு குடும்பத்துடன் எவ்வளவு அட்டூழியம் செய்தார். அன்றைக்கே அறிக்கை கொடுத்தேன். எல்லோரையும் போ போ போ… என்று சொன்னார். இங்கே ஏன் வர என்று கேட்டார். எல்லோரையும் தள்ளிவிட்டுவிட்டு முதல் ஆளாக சாமியை பார்க்க வேண்டும் என அக்கறை காட்டக்கூடியவர் சேகர்பாபு. சாதாரண பொதுமக்கள் கிலோ மீட்டர் கணக்கில் நடந்து வருகிறார்கள். அவர்கள் மேல் அவ்வளவு காட்டலாமே.
முதலவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தால் எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள். அறநிலைத் துறை காட்டுக்கிறதல்லவா? தவறில்லை. காட்டுங்கள். முதல்வர் துனைவியார். விதிமுறைப்படி அக்கறை காட்டுங்கள். அதில் பாதியாவது பொதுமக்களுக்கும் காட்டலாம் அல்லவா?
அதை ஏன் சேகர் பாபு கொடுக்கமாட்டேங்குறார். உடனே வரிஞ்சிகட்டிட்டு என்னை முதலமைச்சர் அடக்கி வச்சிருக்காரு. நான் முரட்டுக்களை. என்னை அவுத்து விட்டால் அண்ணாமலையை முட்டிவிடுவேன் என டயலாக் வேற விடுவார்.
ஒரே டயலாக்கை மூன்றரை வருஷமாக கிழிந்து போன டேப்பரிக்கார்டு மாதிரி சொல்லிக்கொண்டு இருக்கிறார். முதலமைச்சர் என்னை கட்டுப்படுத்த வில்லை என்றால் சேகர் பாபு யார் என்பதை காட்டி விடுவேன் என்று.
தயவுசெய்து சொல்கிறேன். நீங்கள் எல்லாம் அறநிலைத்துறை அதிகாரிகள், அமைச்சர்களாக இருக்கிறீர்கள். மக்களுக்கு நல்லது செய்ய பாடுபடுங்கள்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

