IND Vs ENG 3rd ODI: ஒயிட்-வாஷ் செய்யுமா இந்தியா? ஃபயர் விடுவாரா கோலி? இங்கிலாந்து உடன் 3வது ஒருநாள் போட்டி
IND Vs ENG 3rd ODI: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநள் போட்டி, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND Vs ENG 3rd ODI: அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா Vs இங்கிலாந்து - 3வது ஒருநாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என இழந்தது. அதைதொடர்ந்து, இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளையும் அடுத்தடுத்து வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்த சூழலில் தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
தொடரை வெல்லுமா இந்திய அணி?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் Disney+ Hotstar செயலி மற்றும் இணையதளத்திலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியில் வென்று இங்கிலாந்தை ஒயிட்-வாஷ் செய்ய இந்திய அணியும், போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியையாவது கைப்பற்ற வேண்டும் என இங்கிலாந்து அணியும் தீவிரம் காட்டுகின்றன. அதோடு, இந்த போட்டி சாம்பியன்ஸ் ட்ராபிக்கிற்கு முன்னதாக இரு அணிகளுக்குமான பயிற்சி ஆட்டமாகவும் அமைந்துள்ளது. இதனால் இன்றயை போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் பலம், பலவீனம் - கோலி?
உள்ளூர் ரசிகர்கள் மற்றும் மைதானத்தின் சூழல் இந்திய அணிக்கு பெரும் பலமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக மோசமான ஃபார்மில் தவித்து வரும் கோலி கடைசி போட்டியிலும் சொதப்பியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். அதேநேரம், கடந்த போட்டியில் சதம் விளாசி கம்பேக் கொடுத்த ரோகித் சர்மா, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார். ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் படேல் ஆகியோர் நல்ல ஃபார்மில் தொடர்வது அணிக்கு பலத்தை தருகிறது. கே,.எல். ராகுலுக்கு நிலையான பொசிஷன் வழங்கப்படாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த போட்டியில் ஷமி தலைமையிலான பவுலிங் யூனிட் ஆரம்பத்தில் ரன்களை வாரி கொடுத்தாலும், பின்பு சுதாரித்துக் கொண்டு இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தினர். இதேநிலை தொடர்ந்தால், இன்றைய போட்டியிலும் வென்று தொடரை இந்திய அண் கைப்பற்றலாம்.
நேருக்கு நேர்:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை, 109 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் இந்தியா 60 போட்டிகளிலும், இங்கிலாந்து 44 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் சமனில் முடிய, 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக கருதப்படுகிறது. ஒரு ஓவருக்கான சராசரி ரன் விகிதம் 5-க்கும் குறைவாக உள்ளது. ஆனால், கடந்த சில காலங்களாக குறிப்பாக ஐபிஎல் தாக்கத்தால் இந்த ஆடுகளம், வேகமானதாகவும், அதிரடியாக ரன் குவிப்பதற்கு ஏதுவானதாகவும் மாறி வருகிறது. இதனால், இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியக்கூடும்.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ரோகித் சர்மா, பாண்டியா, அக்சர் படேல், ராணா, ஷமி, வருண் சக்ரவர்த்தி, கே.எல். ராகுல் (வி.கீ), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் , சுப்மன் கில், ஜடேஜா
இங்கிலாந்து: பிடி சால்ட் (வி.கீ.,) , ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேஎல் ஸ்மித், ப்ரூக், டக்கெட், லிவிங்ஸ்டோன், அட்கின்சன், ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரஷீத், ஜோ ரூட்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

