"இந்துக்களின் விரோதி" மகா கும்பமேளா குறித்து மம்தா சர்ச்சை கருத்து.. கொதித்த பாஜக!
மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பதிலடி அளித்துள்ள பாஜக, மகா கும்பமேளாவை மம்தா அவமதித்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், இந்துக்களின் விரோதி என குற்றம் சாட்டியுள்ளார்.
ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளாவில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை, வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என மத்திய, மாநில பாஜக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மகா கும்பமேளா குறித்து மம்தா பேசியது என்ன?
குறிப்பாக, கும்பமேளாவிற்காக விடப்பட்ட சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக மக்கள் காத்திருந்தபோது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், மகா கும்பமேளா, மரண கும்பமேளாவாக மாறிவிட்டதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவையில் உத்தரப் பிரதேச பாஜக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்திய அவர், "மகா கும்பமேளா ‘மரண கும்பமேளா’வாக மாறிவிட்டது.
எதிர்ப்பு தெரிவித்த பாஜக:
மகா கும்பமேளாவை நான் மதிக்கிறேன். புனித கங்கை மாதாவை நான் மதிக்கிறேன். ஆனால், எந்த திட்டமிடலும் இல்லை. பணக்காரர்கள், விஐபிக்கள் உள்ளிட்டவர்களுக்கு ₹1 லட்சம் வரை கொடுத்து தங்கும் விடுதி பெற வசதி இருந்தது.
ஆனால், ஏழைகளுக்கு, கும்பமேளாவில் எந்த ஏற்பாடுகளும் இல்லை. அதிக மக்கள் கூடும் இடங்களில் நெரிசல் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், ஏற்பாடுகளைச் செய்வது முக்கியம். நீங்கள் என்ன திட்டமிடல் செய்தீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக, மகா கும்பமேளாவை மம்தா அவமதித்துவிட்டதாக விமர்சித்துள்ளது. மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவரும் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜியின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தார். கும்பமேளாவை இதுபோன்று அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்திய பாஜக எம்எல்ஏக்கள், மம்தாவை இந்துக்களுக்கு விரோதமான முதலமைச்சர் என விமர்சித்தனர். மகா கும்பமேளாவை அவமதிப்பதை இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினர்.
இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

