மேலும் அறிய
Advertisement
திருச்சி மாநகரின் 2வது பெண் போலீஸ் கமிஷனராக காமினி பதவி ஏற்றார்
திருச்சியில் போதைபொருள் விற்பனை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுக்கப்படும் - திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சத்தியபிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக சமீபத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய என்.காமினி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, திருச்சி மாநகரின் 33-வது போலீஸ் கமிஷனராக என்.காமினி நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். திருச்சியின் புதிய கமிஷனர் என்.காமினி, 2004 பேட்ஜ்ஜை சேர்ந்தவர். இவர் திருச்சியின் 33-வது போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருச்சி மாநகரின் இரண்டாவது பெண் போலீஸ் கமிஷனர் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர். இவர் 1997- ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்தார். இவர் சேலம், விருதாச்சாலம், ஆகிய இடங்களில் டிஎஸ்பியாக பணியாற்றினார். மேலும் 2004-ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். இவர் வேலூர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் டிஐஜியாக பணியாற்றினார். கடந்த 2022-ம் ஆண்டு ஐஜிபி கிரைம் பிரிவில் பதவி உயர்வு பெற்றார்.
குறிப்பாக 2004-ம் ஆண்டு ஐ.பி.எஸ். ஆக பதவி உயர்வு பெற்ற இவர், ராமநாதபுரம், வேலூர், மதுரை சரகங்களில் டி.ஐ.ஜி.யாக பதவி வகித்துள்ளார். 2022-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். இவர் தனது சிறந்த சேவைக்காக 2017-ம் ஆண்டில் முதலமைச்சர் பதக்கமும், 2019-ம் ஆண்டில் ஜனாதிபதி பதக்கமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகர கமிஷனர் காமினி செய்தியாளர்களிடம் கூறியது :
திருச்சி மாநகரில் முக்கியான பிரச்சனையாக இருப்பது போதைபொருள் விற்பனை, லாட்டரி விற்பனை, கொள்ளை சம்பவங்கள் ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்க உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மேலும் மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களை ஏற்கெனவே கண்டறியபட்டுள்ளது. ஆகையால் அந்த அந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி நெரிசலை சீர் செய்வார்கள். அதேசமயம் குற்றங்களை தடுக்க நகரில் தற்போது உள்ள சிசிடிவி கேமராகள் எண்ணிக்கையை அதிகரித்து கண்காணிக்கபடும் என்றார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பிரசனைகளுக்கு தனி கவனம் செலுத்தபடும் என தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion