TN Headlines: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ...!
TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை கீழே காணலாம்.
- Annamalai vs Mano Thangaraj: ’ மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை அல்ல ‘ - அண்ணாமலைக்கு பதில் கொடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ்..
அண்ணாமலை தன் எக்ஸ் தளத்தில் ” மனோ தங்கராஜ், இன்றைய உங்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், வடமாநில பால் உற்பத்திநிறுவனங்களிடம் கையூட்டு பெற்று ஆவின் நிறுவனத்திற்கு எதிராக நான் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். உங்களுக்கு 48 மணிநேரம் அவகாசம் தருகிறேன். ஊழல் திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களைப் பொதுவெளியில் வெளியிடவேண்டும். மேலும் படிக்க
- Karthigai Deepam 2023: கார்த்திகை தீப திருவிழா: மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு
தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம் ஆகும். கடந்த அக்டோபர் 29-ந் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் ஆகும். உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கோயில் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களிலும் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மேலும் படிக்க
- Latest Gold Silver Rate: அதிரடியாக உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம் இதோ..
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ரூ.46,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 அதிகரித்து ரூ.5,755 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.49,800 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,225 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க
- மதுரையில் 2-வது நாளாக ஓடும் வெள்ளநீர்; கடல் போல காட்சியளிக்கும் வைகையாறு
தேனி மாவட்டம் வைகை அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதோடு வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்காகவும் , திருமங்கலம் ஒருபோக பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக நேற்று காலை 5899 கன அடி நீரானது திறக்கப்பட்ட நிலையில் மாலை 6 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டது. மேலும் படிக்க
- Thiruvannamalai Special Bus: கார்த்திகை தீப திருநாள்.. திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்..முழு விவரம் இதோ..
நாளை கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான மகா தீப திருவிழா நாளை நடைபெறூகிறது. கார்த்திகை தீப விழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் படிக்க