மேலும் அறிய

Vijayakanth Son Wedding: கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம்! மணமகள் இவரா? கன்ஃபாம் பண்ணிய சண்முக பாண்டியன்!

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை, அவரது தம்பி சண்முக பாண்டியன் உறுதி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவை தன்னுடைய அபார நடிப்பாலும், தமிழகத்தை தன்னுடைய அசாத்திய திறமையாலும் ஆட்டி படைத்தவர் கேப்டன் விஜயகாந்த். கோலிவுட் திரையுலகம் கண்டெடுத்த கருப்பு எம்ஜிஆர் என இவரை ரசிகர்கள் கொண்டாடினர். அதே போல் தன்னிடம் கஷ்டம் என வருபவர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ள விஜயகாந்த், தன்னை தேடி வருபவர்கள் யாரையும் பசியோடு அனுப்ப கூடாது என்பதை தன்னுடைய வாழ்நாள் கொள்கையாகவே வைத்திருந்தார்.

விஜயகாந்த் முன்னணி நடிகராக இருக்கும் போதே... பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டநிலையில், அவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயகாந்த் மறைவுக்கு பின்னர், விஜய பிரபாகரன் தீவிரமாக தன்னுடைய அம்மாவுடன் இணைந்து அரசியல் பணிகளை கவனித்து வரும் நிலையில், சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நிலைத்து நிற்க போராடி வருகிறார்.

Vijayakanth Son Wedding: கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம்! மணமகள் இவரா? கன்ஃபாம் பண்ணிய சண்முக பாண்டியன்!

'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சண்முக பாண்டியன் நடிப்பில், கடந்த வாரம் ரிலீஸ் ஆன திரைப்படம், 'படைத்தலைவன்'. இந்த படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதே போல் இதுவரை சுமார் 5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த படம், திரையரங்குகளில் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் நாள் அன்று தன்னுடைய அண்ணனோட திரையரங்கிற்கு விசிட் அடித்த சண்முக பாண்டியன் ரசிகர்கள் இந்த படத்திற்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்தும் தன்னுடைய தந்தையை நினைத்தும் கண் கலங்கினார். இந்த படத்தை தொடர்ந்து சண்முக பாண்டியன் நடித்து வந்த 'கொம்பு சீவி' திரைப்படம் தற்போது, படப்பிடிப்பு முடைவடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Vijayakanth Son Wedding: கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம்! மணமகள் இவரா? கன்ஃபாம் பண்ணிய சண்முக பாண்டியன்!

இது ஒருபுறம் இருக்க...  தற்போது தன்னுடைய அண்ணன் திருமணம் குறித்த செய்தியை கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சண்முக பாண்டியன். கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய பிரபாகரனுக்கு பிரபல தொழிலதிபர் மகள் கீர்த்தனா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அதன் பின்னர் விஜயகாந்த் உடல் நிலை காரணமாக தொடர்ந்து, இவரது திருமண ஏற்பாடுகள் எதுவும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

விஜயகாந்த் மறைந்த பின்னர், ஒரு வருடம் ஆன பின்னரே விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்கும் என அவரது நெருங்கிய வட்டாரத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது படைத்தலைவன் செய்தியாளர் சந்திப்பின் போது விரைவில் எங்கள் வீட்டிற்கு அண்ணி வரப்போகிறார் என கூறி  இந்த ஆண்டு விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ள தகவலை உறுதி செய்துள்ளார். அதே நேரம் ஏற்கனவே விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணான கீர்த்தனா தான் மணமகளா? அல்லது வேறு யாரையாவது விஜய பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget