மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Thiruvannamalai Special Bus: கார்த்திகை தீப திருநாள்.. திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்..முழு விவரம் இதோ..

கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி இன்று முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

நாளை கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்ச பூத தளங்களில் அக்னி தளமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான மகா தீப திருவிழா நாளை நடைபெறூகிறது. கார்த்திகை தீப விழா 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 23  தேரோட்டம் நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் நாளை நடைபெறும் கார்த்திகை தீப திருநாள் மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படுகிறது.

மேலும் திருவண்ணாமலையில் பக்தர்களின் வருகை ஒட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் மக்கள் கிரிவலப்பாதைக்கு சென்று திரும்ப வசதியாக 40 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிற்றுந்துகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்களுக்கு எந்த வித அசௌகரியமும் ஏறபடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக  நாளை மறுநாள் (நவம்பர் 26) அதிகாலை அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வில்  ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள  2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1000 பேருக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. பக்தர்கள் www.annamalaiyar.hrce.tn.gov என்ற இணைய தளம் வாயிலாக பக்தர்கள் அனுமதிச்சீட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மகா தீபம் காண மலையேறும் பக்தர்களுக்கு  பல நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி, “நவம்பர் 26 ஆம் தேதி காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்படும். அங்கு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை (First Come First Serve Basis) என்ற அடிப்படையில் வரிசைப்படி (Queue System) புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது" மாநில அரசுகளின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டிய உச்ச நீதிமன்றம்

Villupuram: பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு; வசமாக சிக்கிய ஆசிரியர்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget