மேலும் அறிய

மதுரையில் 2-வது நாளாக ஓடும் வெள்ளநீர்; கடல் போல காட்சியளிக்கும் வைகையாறு

காவல்துறையினர் இல்லாத நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக சென்றுவருவதால்  காவல்துறையினரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஒருபுறம் வெள்ளப்பெருக்கு மறுபுறம் ஆகாய தாமரை செடி ஆக்கிரமிப்பால் வெள்ளநீர் வெளியேறாததால் விவசாய தேவைக்கு சென்றடையாத நீர்.

தேனி மாவட்டம் வைகை அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதோடு வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேனி, மதுரை, சிவகங்கை ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாய தேவைகளுக்காகவும் , திருமங்கலம் ஒருபோக பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் தேவைக்காக நேற்று காலை 5899 கன அடி நீரானது திறக்கப்பட்ட நிலையில் மாலை 6 ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று நீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டு 4969 கன அடி நீரானது குறைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நாளாகும் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது.

கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஆல்பம் காண இங்கே கிளிக் செய்யவும் - விமர்சையாக நடைப்பெற்ற கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா!
 
மதுரையில் 2-வது நாளாக ஓடும் வெள்ளநீர்; கடல் போல காட்சியளிக்கும் வைகையாறு

மதுரை வைகையாற்றின் மையப் பகுதியான மதுரை யானைக்கல் தரைப்பாலம் அருகே உள்ள தடுப்பணை பகுதியில் ஆகாயத்தாமரை செடிகள் முழுவதுமாக சூழ்ந்துள்ளதால் வெள்ளநீர் வெளியேற முடியாமல் மெதுவாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பணையின் மற்றொருபுறம் ஆழ்வார்புரம் வைகையாற்று பகுதி முழுவதிலும் வெள்ள நீரானது கடல் போல இரு புறங்களிலும் ஓடி செல்கின்றன. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு விவசாய தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீர்  விரைவாக செல்ல முடியாத அளவிற்கு மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் விவசாயத்திற்கான தண்ணீர் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. 

மதுரையில் 2-வது நாளாக ஓடும் வெள்ளநீர்; கடல் போல காட்சியளிக்கும் வைகையாறு

விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை அளித்த நிலையிலும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் இடையே நிலவும் அதிகாரவரம்பு பிரச்சனையால் ஆறு முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்துள்ளது. மேலும் தடுப்பணை அருகே உள்ள பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து உள்ளதால் வைகை ஆற்றை ஓட்டிய பிரதான சாலைகளிலும் தொடர்ந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுப்பாதைகளான கோரிப்பாளையம், நெல்பேட்டை ஆகிய பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது.

மதுரையில் 2-வது நாளாக ஓடும் வெள்ளநீர்; கடல் போல காட்சியளிக்கும் வைகையாறு

மேலும் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை பேரிடர் மீட்புத்துறையால் விடுக்கப்பட்ட நிலையிலும் வைகையாற்று பகுதிகளில் பொதுமக்கள் துணிதுவைப்பது, குளிப்பது, மீன்பிடிப்பது, கரையோரங்களில் வாகனங்களில் செல்வது போன்ற ஆபத்தை உணராமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். வைகையாற்று பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் இல்லாத நிலையில் பொதுமக்கள் அலட்சியமாக சென்றுவருவதால்  காவல்துறையினரை தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget