TNPSC குரூப் - 1, 1ஏ தேர்வு ; ஆயிரக்கணக்கானோர் ஆப்சென்ட்... அதிர்ச்சி தரும் சேலம் , விழுப்புரம்
சேலம் : டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது, இதில் 3,326 பேர் வரவில்லை.

சேலம்: டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது, இதில் 3,326 பேர் வரவில்லை, இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்களும், குரூப்-1ஏ பணியிடங்களில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வு எழுதினர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வு எழுதினர்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு, நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, தெற்கு, ஆத்துார் வட்டத்துக்கு உட்பட்ட, 41 மையங்களில், 55 கூடங்களில் தேர்வு நடத்தப்பட்டது. காலை, 8:30 முதல், 9:00 மணி வரை, தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 14,291 பேரில், 10,965 பேர் தேர்வு எழுதினர். இது, 76.72 சதவீதம். 3,326 பேர் வரவில்லை. இது, 23.27 சதவீதம். தேர்வு மையங்களை, 14 நடமாடும் குழுவினரும் கண்காணித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 2867 பேர் பங்கேற்பு
சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். தேர்வாணைய விதிமுறைப்படி வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம், தேர்வர்களின் நுழைவுச்சீட்டு சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக, கலெக்டர் தெரிவித்தார்.
விழுப்புரம் : 2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகை புரியவில்லை
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மற்றும் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லூரி மையங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 மற்றும் 1A நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தினை தலைமையிடமாகக் கொண்டு 13 தேர்வு மையங்களில் 28 அறைகளிலும், திண்டிவனம் வட்டத்தினை தலைமையிடமாகக் கொண்டு 4 தேர்வு மையங்களில் 6 அறைகள் என மொத்தம் 17 தேர்வு மையங்களில் 34 அறைகளில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 மற்றும் 1A நடைபெற்று வருகிறது. இத்தேர்விற்கு 8493 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 6395 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரிந்துள்ளனர்.
2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை. அதாவது, 75.30 சதவீதம் தேர்வர்கள் தேர்வெழுதி வருகின்றனர். 24.70 சதவீதம் தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை. மேலும், இத்தேர்வு பணியினை கண்காணித்திட பறக்கும் படை அலுவலர்கள், நடமாடும் குழு அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுபட்டனர்.





















