ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்
2026 - ல் கூட்டணி ஆட்சி தான் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி ஆட்சி தொடர்பாக பாஜக தலைகள் தொடர்ந்து பேசிவருதற்கு பின்னணியில் அமித்ஷாவின் அசைமெண்ட் இருப்பதாகவும் சொல்கின்றனர்.
தமிழ் நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை இப்போதே தமிழக கட்சிகள் தீவிரபடுத்தியுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி செய்தார். கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும் கூட்டணிக்குள் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட போது அமித்ஷா 2026-ல் கூட்டணி ஆட்சி தன் என்று மேடையிலே சொன்னார். ஆனால் இதை வெளியே வந்து செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டணி ஆட்சி எல்லாம் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெளிவுபடுத்தினார்.
கொஞ்ச நாட்களா அமைதியாக இருந்த இந்த பிரச்சனையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் தூண்டி விட்டார் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் ,”2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன். பாஜக ஆட்சி என்று தான் சொல்வோன். 2026-பாஜக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும்” என்று பேசினார். இவரது இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பதிலடி கொடுத்தார். அதில், “சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள, தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலே கருத்து சொல்வதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இபிஎஸ் தலைமையில் தான் அதிமுக ஆட்சி மலரும்”என்றார். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். இபிஎஸ் தான் முதலமைச்சார்” என்றார்.
இந்த நிலையில் தான் 2026 - ல் கூட்டணி ஆட்சி தான் என்பதில் பாஜக உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பின்னணியில் அமித்ஷாவின் அசைமெண்ட்தான் முழுக்க முழுக்க இருப்பதாக சொல்கின்றனார். பாஜக தலைகளிடம் தொடர்ந்து கூட்டணி ஆட்சி தொடர்பக பேசுங்கள் என்றும் இபிஎஸ் கூட்டணி கட்சிகள் தலைவராக தமிழ் நாட்டில் இரு்ந்தாலும் நாம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றும் ஸ்ட்ரிட் ஆக சொல்லிவிட்டதாக சொல்கின்றனர். முன்னதாக, இரட்டை இலை வழக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் என்பதை வைத்து பாஜக அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தான் கூட்டணி ஆட்சி என்று கூறிவரும் பாஜகவிற்கு எதிராக பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.





















