நம்ம மதுரையில் திறக்கப்பட்ட Zivame கிளை.. ஃபிராஞ்சைஸியில் சேர விருப்பமா? இதை படிங்க
Zivame நிறுவனத்தின் வளர்ச்சி பாதையில் முக்கியமான கட்டமாக, முதல் ஃபிராஞ்சைஸ் ஸ்டோர் மதுரையில் உள்ள விஷால் டி மாலில், 2025 ஜூன் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது.

மதுரையில் முதல் ஃபிராஞ்சைஸ் ஸ்டோரினை தொடங்கி, இந்திய முழுவதும் விரிவடைய உள்ள திட்டத்தை அறிவித்தது zivame.
இந்தியாவின் இண்டிமேட் வெர் சந்தை தரம், உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் அணுகுமுறை மற்றும் வசதிகளின் மேம்பாட்டால் விரைவாக மாற்றமடைந்து வருகிறது. இந்த மாற்றத்தின் முன்னணியில் இருப்பது தான் Zivame - இந்தியாவின் முன்னணி நேரடி-வாடிக்கையாளர் (D2c) இண்டிமேட்வேர் பிராண்ட் -பெண்கள் இண்டிமேட்வேரை எப்படி தேர்வு செய்கிறார்கள்.
பயன்படுத்துகிறார்கள் மற்றும் வாங்குகிறார்கள் என்பதில் புதிய வழிகாட்டியாக மாறியுள்ளது. டிஜிட்டல் புதுமை மற்றும் விரிவாகும் ரீடெயில் வலையமைப்பின் மூலம் Zivame இண்டிமேட்வேர் அனுபவத்திற்கான புதிய அளவுகோல்களை நாட்டெங்கும் அமைத்து வருகிறது.
Zivame நிறுவனத்தின் வளர்ச்சி பாதையில் முக்கியமான கட்டமாக, முதல் ஃபிராஞ்சைஸ் ஸ்டோர் மதுரையில் உள்ள விஷால் டி மாலில், 2025 ஜூன் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது தென்னிந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் சந்தைகளில் ஒன்றில் நிகழ்த்திய முக்கிய நுழைவு ஆகும்.
இந்த வெகு சிறப்பான தொடக்க விழாவை விஷால் டி மால் இயக்குனர் ராஜரத்தினம் இலகோவன் துவக்கி வைத்தார். விழாவில் Zivame CEO லாவண்யா பச்சீசியா ரீடெயில் தலைவர் ஜெயேந்திரநாத், பிராண்ட் மார்க்கெட்டிங் தலைவர் டமன் பாலி. மற்றும் மதுரை மக்களின் உற்சாகப் பங்கேற்பும் இருந்தது. இந்த புது ஸ்டோர் துவக்கம், தென்னிந்திய சந்தையில் Zivame நிறுவனத்தின் வலிமையான நிலையை வெளிக்கொணர்வதோடு, அதன் அடுத்த பெரிய வளர்ச்சியின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
முதன்மை ஃபிராஞ்சைஸ் ஸ்டோரின் தொடக்க விழாவில் CEO லாவண்யா பச்சீசியா கூறியதாவது:
- Zivame நிறுவனம் பெங்களூரில் தோன்றியது என்பதாலும் தென்னிந்தியா எப்போதும் எங்களுக்கான முக்கிய சந்தையாகவே இருந்தது. உள்ளூர் ஃபிராஞ்சைஸ் பங்காளிகளுடன் இணைந்து நாங்கள் விரிவாக செயல்படுவதால், அந்தந்த பகுதி மக்களின் விருப்பங்களை நன்றாக புரிந்து கொண்டு. அதற்கேற்ப சேவைகளை வழங்க முடிகிறது. இது Zivame அனுபவத்தை இந்தியாவின் பல்வேறு சமூகங்களிலும் மிகவும் எளிதாகவும் தொடர்பானதாகவும் மாற்றுவதில் முக்கியமான படியாகும்."
இப்போது இந்தியா முழுவதும் பல இடங்களில் ரீடெயில் ஸ்டோர்களுடன் வலுவான அடிப்படை அமைந்துள்ள Zivame, மெட்ரோ, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் விரிவடைவதை நோக்கமாகக் கொண்டு செயல் திட்டங்களை செயல்படுத்துகிறது. இது அதன் ஆன்லைன் வலையை மேம்படுத்தும் வகையில், ஆஃப்லைன் அனுபவத்தையும் நாட்டின் பல பகுதிகளில் கொண்டு சேர்க்கும்.
ஃபிராஞ்சைஸ் பங்காளியாக விரும்புவோர்களுக்கு, Zivame நிறுவனத்தின் ஃபிராஞ்சைஸ் திட்டம் வலுவான பிராண்ட் மதிப்பீடு, நன்கு நிரூபிக்கப்பட்ட வணிக மாதிரி மற்றும் முழுமையான செயல்பாட்டு ஆதரவுடன் கூடிய லாபகரமான வாய்ப்பாக அமைகிறது.
ஃபிராஞ்சைஸ் தொடர்பான விபரங்களுக்கு அல்லது நீங்கள் ஃபிராஞ்சைஸராக ஆர்வமுள்ளவராக இருந்தால், கீழே உள்ள மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்:
partnership@zivarme.com
2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Zivame இண்டிமேட்வேர் பிரிவில் நுகர்வோர் தேவை, புதுமை தொழில்நுட்பம் மற்றும் நவீன டிசைன் அடிப்படையில் புதிய தரங்களை அமைத்துள்ளது - இவை அனைத்தும் பெண்களின் ஆறுதலையே மையமாகக் கொண்டு உக்கப்பட்டவை. 2025-ஆம் ஆண்டுக்குள், லிங்கரி, ஸ்லீப்ப்வேர், ஷேப் வேர் மற்றும் ஆக்டிவ்வேர் ஆகியவற்றில் 50,000-க்கும் மேற்பட்ட ஸ்டைல்கள் மற்றும்
100. அளவுகளில் Zivame ஒரு சிறந்த ஃபேஷன் ரீடெயில் தளமாக வளர்ந்துள்ளது.
இந்தியாவின் முதல் ஆன்லைன் Pllcode அறிமுகம் முதல் Museum of Boobs போன்ற புதிய பிரச்சாரங்கள்வரை Zivame எப்போதும் முன்னணியில் இருந்து கடந்துவருகிறது. தொழில்நுட்பத்தையும் நுகர்வோர் புரிதலையும் ஒன்றிணைத்தும், இந்திய பெண்களின் இண்டிமேட்வேர் அனுபவத்தை முழுமையாக மாற்றி அமைத்து இன்று நாட்டின் மிகவும் தாக்கம் கொண்ட ஃபேஷன் ரீடெயில் பிராண்டாக உயர்ந்துள்ளது.
(Disclaimer: ABP Network Pvt. Ltd. and/or ABP Live does not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article and/or views expressed herein. Reader discretion is advised.)




















