வெற்றிமாறன் படத்திற்கு புது லுக்கில் சிம்பு...படப்பிடிப்பு தளத்தில் வெளியான செம க்ளிக்
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில் படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன

வெற்றிமாறன் சிம்பு கூட்டணி...படத்தில் இணைந்த நெல்சன
தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த இயக்குநர்களின் படத்தில் நடிக்க இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது.
வடசென்னையை மையப்படுத்திய கதைக்களத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகின. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. படத்திற்காக சிம்பு புதிய கெட் அப் மாறியுள்ளார்
சிம்புவின் புது லுக்
வடசென்னை படத்தில் நடித்த அண்டிரியா , சமுத்திரகனி இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் இயக்குநர் நெல்சன் படத்தில் சின்ன ரோல் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நெல்சனின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரியளவில் கவனம் பெறும் என்று கூறப்படுகிறது. முன்னதாக குபேரா படத்தின் ஆடியோ லாஞ்சில் வடசென்னை படம் அடுத்த ஆணு வெளியாகும் என தனுஷ் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது சிம்பு நடிக்கும் படம் வடசென்னை படத்தின் ஒரு பாகமாக உருவாகிறதா என்கிற கேள்வியும் இருந்து வருகிறது.
Yow Vetri ennaya idhu ? pic.twitter.com/vLjJuXamcy
— 𝐏𝐫𝐮𝐬𝐡𝐨𝐭𝐡 𝚂𝙵𝙲 👽 (@ur_boy_prushoth) June 16, 2025
தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோ வீடியோவை எடுத்து வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய லூக்கில் சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. சிம்புவின் காஸ்டியும் வட சென்னையில் தனுஷ் நடித்த அன்பு கதாபாத்திரத்தைப் போல் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.





















