மேலும் அறிய
Karthigai Deepam 2023: கார்த்திகை தீப திருவிழா: மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு
திருக்கார்த்திகை காரணமாகவும், தொடர் மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
![Karthigai Deepam 2023: கார்த்திகை தீப திருவிழா: மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு Karthigai Deepam 2023 flowers price increases Madurai flower market TNN Karthigai Deepam 2023: கார்த்திகை தீப திருவிழா: மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/02/aeb7f1aec0bdd36f976a6a9ac317c964_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மல்லிகைப் பூ
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மதுரை மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரை மல்லிகைப் பூ 1 கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Karthigai Deepam 2023 Date and Time: தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம் ஆகும். கடந்த அக்டோபர் 29-ந் தேதி கார்த்திகை மாதம் பிறந்தது. கார்த்திகை மாதம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் ஆகும். உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கோயில் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களிலும் ஜோதி ஏற்றப்பட்டு வழிபாடு நடத்தப்படும். அதேபோல, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி வீடுகளை ஜோதிகளால் ஒளிரவிடுவது வழக்கம் ஆகும்.
’கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் ஆல்பம் காண இங்கே கிளிக் செய்யவும் ’ - விமர்சையாக நடைப்பெற்ற கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா!
கார்த்திகை தீபம் எப்போது? | When is Karthigai Deepam 2023
நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் நாளை 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தினத்தில் வரும் இந்த கார்த்திகை தீப திருநாளில் மக்கள் நாளை மாலை வேளையில் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மதுரை மலர்சந்தையில் பூக்களின் விலை உயர்வு. மதுரை மல்லிகைப் பூ 1 கிலோ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மல்லிகை
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மற்றும் மூகூர்த்த நாட்களையொட்டியும் இன்று பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் மதுரை மல்லிகைப் பூ - நேற்று ஆயிரத்தி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1800ரூபாய்க்கும், முல்லைப்பூ நேற்று 600க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 800 ரூபாய்க்கும், பிச்சி பூ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 900ரூபாய்க்கும் இதுபோன்று சம்மங்கிப்பூ 100ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 700ரூபாய்க்கும், அரளி 400ருபாய்க்கும், பட்டன் ரோஸ் 150 ரூபாய்க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்க்கும் உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் உயர்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. திருக்கார்த்திகை காரணமாகவும், தொடர் மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
அதே போல் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கும் மேலாக பெய்த மழையால் விளைச்சலும் குறைந்துள்ளது. இது போன்ற காரணங்களால் காய்கறிகளின் விலைகள் சற்று அதிகரித்துள்ளன. மதுரை உழவர்சந்தையை விட வெளிமார்க்கெட் விலை 20 சதவீதம் விலை அதிகமாக உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ’ - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion