Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges in India: மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வுப் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில்,நாட்டின் தலைசிறந்த 25 மருத்துவக் கல்லூரிகள் எவை? பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி நடைபெற்ற நீட் இளங்கலைத் தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வை 22.09 லட்சம் எழுதிய நிலையில், 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டு 13.15 லட்சம் ஆக இருந்தது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு 72 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதாத நிலையில், இந்த ஆண்டு சுமார் 66,700 பேர் நீட் தேர்வை எழுதவில்லை.
இந்த நிலையில் மருத்துவக் கலந்தாய்வுக்கான பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. தற்போது நாட்டின் தலைசிறந்த 25 மருத்துவக் கல்லூரிகள் எவை? பார்க்கலாம்.
இந்தியாவின் டாப் 25 மருத்துவ கல்லூரிகள் லிஸ்ட் இதோ!
1. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்- AIIMS), டெல்லி
2. மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனம், சண்டிகர்
3. கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), வேலூர், தமிழ்நாடு
4. தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (நிம்ஹான்ஸ்), பெங்களூரு, கர்நாடகா
5. ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), புதுச்சேரி
6. சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், லக்னோ, உத்தரபிரதேசம்
7. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி, உத்தரபிரதேசம்
8. அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
9. கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி, மணிப்பால், கர்நாடகா
10. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு
11. டாக்டர் டி.வை.பாட்டீல் வித்யாபீடம், புனே, மகாராஷ்டிரா
12. சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை, தமிழ்நாடு
13. மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஸ்ரீ சித்ரா திருனல் நிறுவனம், திருவனந்தபுரம், கேரளா
14. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), ரிஷிகேஷ், உத்தரகண்ட்
15. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), புவனேஸ்வர், ஒடிசா
16. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), ஜோத்பூர், ராஜஸ்தான்
17. வர்த்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தார்ஜங் மருத்துவமனை, புது தில்லி
18. எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை, தமிழ்நாடு
19. கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் (கே.ஜி.எம்.யூ), லக்னோ, உத்தரபிரதேசம்
20. ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, தமிழ்நாடு
21. சிக்ஷா 'ஓ' அனுசந்தன், புவனேஸ்வர், ஒடிசா
22. முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கொல்கத்தா, மேற்கு வங்கம்
23. தத்தா மேகே உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வாரா, மகாராஷ்டிரா
24. மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி (MAMC), டெல்லி
25. கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT), புவனேஸ்வர், ஒடிசா
இந்தப் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 7 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கல்லூரிகளின் பட்டியல் என்ஐஆர்எஃப் எனப்படும் மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2024ஆம் ஆண்டில் வெளியிட்ட தர வரிசைப் பட்டியல் ஆகும்.






















