காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

சிபிஐ-யின் புதிய இயக்குனராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால்  நியமிக்கப்பட்டுள்ளார் என்பன உள்ளிட்ட முக்கியச் செய்திகளின் தலைப்புகளை இதில் அறிந்து கொள்ளலாம்.

FOLLOW US: 

தமிழகம் மற்றும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே காணலாம்.   

1.தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால்  கடந்த 24 மணி நேரத்தில் 468  பேர் உயிரிழந்துள்ளனர்.

2. மத்திய புலனாய்வுத்துறையின் (சிபிஐ) புதிய இயக்குனராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபோத் குமார் ஜெய்ஸ்வால்  நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இரண்டாண்டு காலத்திற்கு அப்பதவியில் இருப்பார்.  

3. செங்கல்பட்டு மத்திய அரசின் எச்.எல் எல் பையோடெக் நிறுவனத்தின் ஆய்வகத்தில்  முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

4. நாடு முழுவதும் கடந்த 24  மணி நேரத்தில், ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று  உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6. நேற்று ஒரே நாளில் 20 லட்சத்து 58 ஆயிரம் கொரோனா வைரஸ்   மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.

7. ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 அல்லது 20ம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் மீதமுள்ள 31 போட்டிகளும் செப்டம்பர் 19 அல்லது 20ம் தேதி துவங்கி அக்டோபர் 10ம் தேதி அளவில் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. 

காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
  
8. தமிழகம் முழுவதும் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு உயர்கல்வித்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகத்தின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

9. யாஸ் அதி தீவிர புயல், புதன்கிழமை (26.05.2021) அதிகாலையில், வடக்கு ஒடிசா, மேற்கு வங்க கரையோரமாக, சந்த்பலி-தம்ரா துறைமுகத்திற்கு அருகே சென்றடையும் என்றும்,  பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, பாலசோர் அருகே இது மே 26ம் தேதி பிற்பகல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலின் பல பகுதிகளில் மணிக்கு 100-110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாஸ் புயலால்,   பாதிக்கக்  கூடிய  5  மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.  

10. நகர்ப்புறங்களில் அத்தியாசிய பொருட்கள் தொடர்புடைய துறைகள் மூலமாக காய்கறிகள் விற்பனை சிறப்பாக நடப்பதை போல, கிராமங்களிலும் நடப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
Tags: Covid-19 News in tamil Tamil Nadu Morning Breaking News Chennai Coronavirus news in tamil Lockdown news in tamil tamilnadu news Latest News Updates in Tamil Latest News Headlines coimbatore Latest news News Today

தொடர்புடைய செய்திகள்

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு  மாணவர்கள் உயிரிழப்பு!

கருர் - கிணற்றில் தவறிவிழுந்த இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

காஞ்சிபுரம் : 152 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 6 பேர் உயிரிழப்பு..!

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

கரூர் - பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஆட்சியர்

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் அறிக்கை..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !