TNPSC Group 4 Exam 2025: கடைசி நாள், 3935 அரசுப் பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
TNPSC Group 4 Exam 2025: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் (மே.24) முடிவடைகிறது.

TNPSC Group 4 Exam 2025: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
குரூப்-4 தேர்வு பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள விஏஒ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், வனக்காவலர் மற்றும் வனக்காப்பாளர் உள்ளிட்ட 3 ஆயிரத்து 935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கூட இந்த தேர்வை எழுத முடியும் என்பதால், அரசு வேலைவாய்ப்பு கிடைத்துவிடாத என ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் இந்த தேர்வை எழுத விரும்புவோர், கடந்த மாதம் அதாவது ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி, நாளை அதாவது மே 24ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நாளையுடன் வாய்ப்பு முடிவடைய உள்ளதால், கடைசி நேர சிக்கல்களை தவிர்க்க குரூப் 4 தேர்வு எழுத விரும்புவோர் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.
குரூப் 4 விண்ணப்பிக்கும் முறை:
குரூப் - 4 தேர்வு எழுத விருப்பம் கொண்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், WWW.TNPSC.GOV.IN என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணைய முகவரியில் பயனர்கள் ஒன் - டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்து முடித்த பிறகு, தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கும் அளிக்கப்படுகிறது.
குரூப் 4 தேர்வு தேதி
விண்ணப்பிங்களை சமர்த்தபிறகு அதில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால், அதற்கான அவகாசம் வரும் மே 29ம் தேதி முதல் 31ம் தேதி நள்ளிரவு வரை வழங்கப்படுகிறது. தொடர்ந்து, குரூப் 4 தேர்வானது வரும் ஜுலை மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து சான்றிதழ் பதிவேற்றம், நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றின் முடிவில் பணி நியமன ஆணை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
காலிப்பணியிட விவரங்கள்:
அறிவிக்கப்பட்டுள்ள 3935 காலிப்பணியிடங்களில்,
- கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) - 215 பணியிடங்கள்
- இளநிலை உதவியாளர்(பிணையமற்றது) - 1,621 பணியிடங்கள்
- இளநிலை வருவாய் ஆய்வாளர் - 239 பணியிடங்கள்
- தட்டச்சர் - 1,099 பணியிடங்கள்
- சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) - 368 பணியிடங்கள்
- உதவியாளர் 54 பணியிடங்கள்
- கள உதவியாளர் 19 பணியிடங்கள்
- வனக் காப்பாளர் 62 பணியிடங்கள்
- ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் 35 பணியிடங்கள்
- வனக் காவலர் 71 பணியிடங்கள் ஆகியவை அடங்கும்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான தொழில்நுட்ப கல்வியை முடித்து இருக்க வேண்டும். வனக்காப்பாளர் பதவிக்கு 12ம் வகுப்பும், வனக்காவலர் பதவிக்கு 10ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக இளநிலை உதவி பொறியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வர்களுக்கான வயது வரம்பு மாற்றமடைகிறது. இதுபோக இடஒதுக்கீடு மற்றும் சமூகம் சார்ந்தவர்களுக்கு, வயது வரம்பில் தளர்வும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக,
- கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கான வயது 21 முதல் 42 வரை இருக்கலாம்
- வனக் காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 21 முதல் 37 வரை இருக்கலாம்.
- இதர பதவிகளுக்கான வயது 18 முதல் 34 வரை என நிர்ணயிக்கப்படுகிறது
தேவையான ஆவணங்கள்:
- பாஸ்போர்ட் சைஸ் போட்
- ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பம்
- பிறப்பு சான்றிதழ்
- 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்
- பட்டப்படிப்பு சான்றிதழ்





















