Flight Issues: ஒரே நாளில் 4 விமானங்களில் நடுவானில் கோளாறு, 3 யு-டர்ன், ஒரு அவசர தரையிறக்கம் - பயத்தில் பயணிகள்
Flight Issues: சர்வதேச விமானங்களில் அடுத்தடுத்து கோளாறுகள் ஏற்படுவது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Flight Issues: ஒரே நாளில் நான்கு சர்வதேச விமானங்களில் நடுவானில் கோளாறு ஏற்பட்டு, பயணிகளுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நடுவானில் கோளாறு:
36 மணி நேரத்தில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த 4 தனித்தனி விமானங்கள், நடுவானில் பறக்கும்போது அவசர நிலையை அறிவித்துள்ளன. அண்மையில் தான் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்த்துக்குள்லானதில் பயணிகள் உட்பட 279 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்தடுத்து பதிவாகும் அவசர நிலைகள் விமான பயணிகளிடையே உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானங்களில் பயணிக்கலாமா என்ற யோசனையையும் உருவாகியுள்ளது.
4 விமானங்களில் வந்த பிரச்னைகள்:
- இங்கிலாந்தைச் சேர்ந்த போர் விமானம் எரிபொருள் இல்லாததன் காரணமாக அவசர சூழலில் கடந்த ஞாயிறன்று கேரளாவில் தரையிறக்கப்பட்டது
- லுஃப்தான்சாவிலிருந்து ஐதராபாத்தை நோக்கி புறப்பட்ட விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மீண்டும் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்திற்கு திரும்பியது
- டெல்லியை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், பாதி வழியில் இருந்து மீண்டும் ஹாங்காங் திரும்பியது
- மற்றொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியது
அச்சத்தில் பயணிகள்:
மேற்குறிப்பிட்ட நான்கு அவசர தரையிறக்க சம்பவங்களும், வெறும் 36 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து அரங்கேறிய நிகழ்வுகளாகும். இந்த சம்பவங்களால் உயிரிழப்பு பாதிப்பு ஏதும் ஏற்படாவிட்டாலும், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அதிகரித்து வரும்காலகட்டத்தில், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையில் ஏற்படும் நிகழ்வுகள் பொதுமக்களை அச்சத்தில் மூழ்கச் செய்துள்ளது.
அடுத்தடுத்து மூன்று யு-டர்ன்கள்:
1. ராஞ்சிக்கு வராமல் டெல்லிக்கு யு-டர்ன்
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ராஞ்சிக்குச் செல்ல வேண்டிய விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதால் டெல்லிக்குத் திரும்பியது. அதிகாரிகள் தரப்பில், விமானம் ஆய்வு செய்யப்பட்டு, திட்டமிட்டபடி இயக்கப்பட்டது என்று விளக்கமளிக்கப்பட்டது. "எங்கள் விமானங்களில் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், புறப்பட்ட பிறகு டெல்லிக்குத் திரும்பியது. ஆய்வு மற்றும் அனுமதிக்குப் பிறகு, விமானம் திட்டமிட்டபடி செயல்பாடுகளைத் தொடர்ந்தது" என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
2. ஹாங்காங் - டெல்லி - ஹாங்காங்
ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, நடுவானில் தத்தளித்தது. பாதுகாப்பு கருதி, 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற போயிங் 787 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹாங்காங்கிற்குத் திரும்பியது. "ஜூன் 16, 2025 அன்று ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் AI315 விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹாங்காங்கிற்குத் திரும்பியது. விமானம் ஹாங்காங்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. பயணிகளை விரைவில் அவர்களின் இலக்கு டெல்லிக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன," என்று ஏர் இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
3. வெடிகுண்டு மிரட்டலால் யு-டர்ன்
ஃப்ராங்ஃபர்ட்டிலிருந்து ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நடுவானில் திருப்பி அனுப்பப்பட்டது. விமானம் இந்திய வான்வெளிக்கு வெளியே இருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமானம் அதன் தொடக்க இடத்திற்குத் திரும்பியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















