Trump on Harvard: ஹார்வார்டுக்கு ஆப்பு! அடங்காத டிரம்ப்.. இந்திய மாணவர்களின் நிலை என்ன?
உலகின் புகழ்ப்பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு டொனல்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

உலகின் புகழ்ப்பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு டொனல்ட் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
ஹார்வார்ட் பல்கலைக்கழகம்:
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர், பல்கலைக்கழகத்தில் காசா போர் உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து பல்கலைக்கழகம் மாணவர்கள் போராட்டங்களை எடுத்து வந்ததை அடுத்து. டிரம்ப் இதை தடுக்க அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து இருந்தார். "ஹார்வர்டை இனி ஒரு நல்ல கற்றல் இடமாகக் கூட கருத முடியாது, மேலும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் எந்த பட்டியலிலும் கருதக்கூடாது" என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
நிதியில் கைவைத்த டிரம்ப்:
டிரம்ப் வெளியிட்ட உத்தரவுக்கு அடிப்பணிய முடியாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது, இதனால் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்க வேண்டிய 18 ஆயிரம் கோடி நிதியை வழங்குவதை நிறுத்தி வைத்தார் டிரம்ப் இதனால் பல்கலைக்கழகத்திற்கும் டிரம்பிற்கும் இடையே மோதல் போக்கு இருந்துள்ளது.
அமெரிக்கா தடை:
தற்போது மேலும் ஒரு படி மேலே போன டிரம்ப் அரசு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுக்காபு செயலாளர் கிறிஸ்டி நோயெம் தெரிவித்துள்ள அறிக்கையில் ஹார்வார்ட் பல்கலைக்கழக நிர்வாகம் வன்முறை, யூத எதிர்ப்பு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் சிலர் தொடர்பில் உள்ளனர் என்றும் இந்த காரணங்களுக்காக பொறுபேற்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமென்றால் அரசுக்கு தேவையான தகவல்களை 72 மணி நேரத்திற்குள் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
This administration is holding Harvard accountable for fostering violence, antisemitism, and coordinating with the Chinese Communist Party on its campus.
— Secretary Kristi Noem (@Sec_Noem) May 22, 2025
It is a privilege, not a right, for universities to enroll foreign students and benefit from their higher tuition payments… pic.twitter.com/12hJWd1J86
எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழகம்:
அரசின் இந்த அறிக்கைக்கு பல்கலைக்கழகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. “அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் 140 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அறிஞர்கள்(scholars) வரவேற்று ஹார்வாடின் திறனை பாதுக்காப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த நாட்டையும் பல்கலைக்கழகத்தையும் நாட்டையும் அளவிட முடியாத அளவுக்கு வலுப்படுத்துகின்றனர் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்திய மாணவர்கள் நிலை என்ன?
ஹார்வாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியான 500-800 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது உள்ள தகவல் படி ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 788 இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் அவர்களி நிலை என்ன ஆகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.






















