Cyclone Fengal Relief: அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம்: அரசு அதிரடி அறிவிப்பு
புயல் மரக்காணம் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. புதுச்சேரி நகரமே வெள்ளக் காடாக மாறியது. இந்த
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழை பாதிப்பு நிவாரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல விவசாய நிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், படகுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. குடிசை வீடுகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட உள்ளது. மாடு உயிரிழப்புக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் கன்றுக் குட்டிக்கு ரூ.20 ஆயிரம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை, ‘ஜஸ்ட் எஸ்கேப்’ ஆன நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின.
மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே கரையைக் கடந்த ஃபெஞ்சல்
ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே கரையைக் கடந்த நிலையில், மரக்காணம் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. புதுச்சேரி நகரமே வெள்ளக் காடாக மாறியது. இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிவாணம் அறிவித்துள்ளார்