Rahul Gandhi | எகிறி அடிக்கும் திமுக! SILENT MODE-ல் காங்கிரஸ்! வாயை திறப்பாரா ராகுல்? | MK Stalin
மும்மொழிக் கொள்கை விவகாரம், ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அதுதொடர்பாக வாய்திருக்காமல் இருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் இந்த விவகாரத்தில் silent mode-ல் இருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
மத்தியில் இருக்கும் பாஜக அரசு எப்படியாவது நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. அதேபோல் தொகுதி மறுவரையறை திட்டத்தையும் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. மத்திய அரசின் இந்த இரண்டு திட்டங்களுக்குமே தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. தமிழ் நாட்டை ஆளும் கட்சியான திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக மத்திய அரசை எதிர்த்து வருகின்றனர். அதேபோல், தமிழ் நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களையும் திமுக எடுத்து வருகிறது.
ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி இது தொடர்பாக எந்த ஒரு நிலைபாட்டையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் கலவரம் தொடர்பாக வீறியமாக முழக்கமிட்டார். ஆனால் தற்போது நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் ராகுல் காந்தி மும்மொழி கொள்கை விவகாரம், தொகுதிமறுவரையறை தொடர்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தியோ தமிழக காங்கிரஸ் தமிழக எம்.பிக்களோ இது தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
மும்மொழிக்கொள்கை, தொகுதிமறுவரையறையை தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தாலும் வட மாநிலங்களில் தீவிரமான எதிர்ப்பு இல்லை. எனவே இது தொடர்பாக பேசினால் அது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முடியும் என்று ராகுல் காந்தி நினைப்பதாகவும் அதனால் தான் இதுபற்றி ராகுல் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை தமிழ் நாடு அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் சந்தித்து தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தனர்.
பின்னர் ரேவந்த் ரெட்டி பேசுகையில்,”தொகுதி மறுசீரமைப்பை ஏற்கமாட்டோம். முதலமைச்சர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்கிறேன். கட்சி மேலிட அனுமதி பெற்று பங்கேற்பன்” என்று கூறியிருந்தார். இதனடையே மேலிட அனுமதி வேண்டுவதாக ரேவந்த் ரெட்டி கூறியது கங்கிரஸ் டெல்லி தலைமை தொகுதி மறுசீரைப்புக்கு எதிரான கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்காத என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது.
மும்மொழிக் கொள்கை விவகாரம், ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.




















