"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவினரை பாஜக இயக்குவதாக மறைமுகமாக கூறிய நிலையில், அதனை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர்.

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றும்போது, அதிமுகவை எங்கோ உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் இயக்குகிறார்கள் என்பது போல் பேசினார். இதனை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர்.
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி"
அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது உரையின்போது, எங்கோ ஒருவர் உட்கார்ந்து கொண்டு அதிமுகவின் எதிர்காலத்தை நீர்த்துப்போக திட்டம் போடுகிறார் என்றும், அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி செய்வதால், அதிமுகவினர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், நான் சொன்ன கருத்துக்கு வானதி சீனிவாசன் சிரிக்கிறார், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது எனவும் அவர் கூறினார். அதாவது, அதிமுகவை பாஜக இயக்குவதாகவே மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இதை கேட்ட அதிமுகவினர், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பதிலளித்த தங்கமணி... வாழ்த்திய முதலமைச்சர்...
அதிமுக தரப்பிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, எந்த கூட்டணி கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம் என தெரிவித்தார்.
உடனடியாக எழுந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என தங்கமணிக்கு பதிலளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

