North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...
தென் கொரியாவில், அந்நாட்டுடன் இணைந்து அமெரிக்க ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா ஒரு அதிரடியை அரங்கேற்றியுள்ளது.

தென் கொரியாவும், வட கொரியாவும் பரம எதிரிகள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். இந்த சூழலில், அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்ட தென் கொரியாவிற்கு அதிரடியான பதிலடியை கொடுத்துள்ளது வட கொரியா.
தென் கொரியா - அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி
வட கொரியாவால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், தென் கொரியாவை பாதுகாக்கும் வகையில், ஏராளமான அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. இந்நிலையில், இவ்விரு நாடுகளின் ராணுவமும் இணைந்து, அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், மார்ச் 10-ம் தேதி தொடங்கி, இன்று வரை, ‘சுதந்திர கேடயம் 2025‘ என்ற பெயரில், தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதற்கான பூர்வாங்க பயிற்சிகள் முன்னரே தொடங்கிய நிலையில், தென் கொரிய ராணுவம், தவறுதலாக வட கொரிய எல்லைக்கு அருகே உள்ள தென் கொரிய கிரமம் ஒன்றில் 8 குண்டுகளை வீசியதில், பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வட கொரியா, தவறுதலாக தங்கள் நாட்டிற்குள் ஒரு குண்டு விழுந்தால் கூட, போர் தான் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியா
இப்படிப்பட் சூழலில், தங்களை வெறுப்பேற்றும் விதமாக, தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக கருதும் வட கொரியா, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில், எதிரி நாட்டு விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது. தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாகவே தெரிவித்துள்ளது வட கொரியா.
ஏற்கனவே, மார்ச் 10-ம் தேதி, கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களில், வட கொரியா ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த நிலையில், பயிற்சிகள் முடியும் தருவாயிலும், வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் மட்டும், 6-வது முறையாக வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. தற்போது சோதிக்கப்பட்டுள்ள இந்த புதிய ஏவுகணை, வட கொரியாவின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

