தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு..!
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று பிறப்பித்துள்ள புதிய உத்தரவில் தமிழகம் முழுவதும் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய மாநகராட்சி ஆணையர்கள் நியமனம்
மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயனும், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரனும் கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கராவும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர்களாக சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக இயக்குநராக வந்தனா கார்க்கும், சேலம் SAGOSERVE நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பத்மஜாவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநராக சரவணனும், நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண் இயக்குநராக இளம்பகவத்தும் சென்னை மாநகராட்சியின் தென் மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜித் சிங் கஹ்லானும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சார் ஆட்சியராக உள்ளவர்களுக்கு கூடுதல் ஆட்சியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சார் ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு
தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பன்னாவர் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
குன்னூர் உதவி ஆட்சியர் ரஞ்சீத் சிங் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
ஈரோடு மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையர் சரவணன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கூடுதல் இயக்குநராக நியமனம்
கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்திநாதன் தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
தருமபுரி சார் ஆட்சியர் பிரதாப் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
சிவகாசி சார் ஆட்சியர் சி.தினேஷ் குமார் திண்டுக்கல் கூடுதல் ஆட்சியராக நியமனம்
மேட்டூர் சார் ஆட்சியர் சரவணன் தூத்துக்குடி கூடுதல் ஆட்சியராக நியமனம்
திண்டிவனம் சார் ஆட்சியர் அனு அரசு பொதுத்துறை துணை செயலாளராக நியமனம்
குளித்தலை சார் ஆட்சியர் ஷேக் அப்தூல் ரஹ்மான் சேலம் கூடுதல் ஆட்சியராக நியமனம்
சேரன்மாதேவி சார் ஆட்சியர் ப்ரதிக் தயால் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம்
விருத்தாச்சலம் சார் ஆட்சியர் பிரவீன் குமார் ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியராக நியமனம்
ராமநாதபுரம் சார் ஆட்சியர் சுக்ஹபுத்ரா தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.