மணல் அல்ல அனுமதி மறுப்பால் காலவரையற்ற போராட்டம் - மாட்டு வண்டி தொழிலாளர் அறிவிப்பு
மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி மறுத்தால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என மாட்டு வண்டி தொழிலாளர் அறிவிப்பு.

கரூர்: மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி மறுத்தால் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என மாட்டு வண்டி தொழிலாளர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அல்ல அனுமதி கோரி கரூர் நொய்யல் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் இரண்டு வாரங்களாக கோரிக்கை வைத்து வந்துள்ளோம். இதுவரை மாட்டுவண்டி மணல் அல்ல அனுமதிக்கவில்லை உடனடியாக எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மணல் அல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாட்டு வண்டி தொழிலாளர்கள், கரூரில் இரண்டு வாரத்திற்கு முன்பு மாட்டு வண்டியில் அனுமதிக்க கோரி கோரிக்கை மனு அளித்தோம் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றனர்.
12ஆம் தேதி முதல் மணல் அல்ல ஏற்பாடுகள் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர், மீறி 12 ஆம் தேதிக்கு பிறகு மணல் அல்ல அனுமதிக்கவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
லாரியின் மூலம் மணல் அல்ல தனியார் கம்பெனிக்கு தமிழக அரசு அனுமதிக்கப்பட்டு மணல் கொள்ளை போகிறது. அதேபோல எம்சாண்ட் எடுக்கும் நிறுவனம் அளவுக்கு அதிகமாக ஆழம் தோன்றி எடுத்த வருகின்றனர் அதையும் அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டை வைத்தனர்.
எனவே உடனடியாக மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க மணல் அல்ல அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

