மேலும் அறிய

Chennai Highcourt: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. நீதிமன்றத்தில் மாஸ்க் கட்டாயம் - வெளியான அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2020,2021 ஆம் ஆண்டுகளில் உலக நாடுகளில் பெரும் பாதிப்புக்குள்ளான கொரோனா தொற்று மனித இழப்புகளையும், பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த பல மாதங்கள் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என பல கட்டங்களாக இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசிகளும் தொற்றை கட்டுக்குள் பெரிதும் துணை புரிந்தது. 

ஆனாலும் உலகளவில் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுப்படுத்தப்படவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

Chennai Highcourt: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. நீதிமன்றத்தில் மாஸ்க் கட்டாயம் - வெளியான அறிவிப்பு

இந்நிலையில் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. 

மேலும் வழக்குகள் பட்டியிலப்படாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நீதிமன்றத்தில் இருப்பவர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் 

கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு  நேற்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் 10,158 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி,  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,109 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதிகபட்சமாக கேரளாவில் 3,089 பேருக்கும், டெல்லியில், 1,527 பேருக்கும்,  மகாராஷ்டிராவில் 1,086 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் ஹரியானாவில் 855 பேர், தமிழ்நாட்டில் 469 பேர், இமாச்சலபிரதேசத்தில் 440 பேர், உத்தரபிரதேசத்தில் 549 நபர்கள், குஜராத்தில் 417பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

 கர்நாடகாவில் 498, ராஜஸ்தானில் 293,  உத்தரகாண்டில் 196 பேர், சத்தீஸ்கரில் 370, பஞ்சாப்பில் 322,ஒடிசாவில் 258,  ஜம்முகாஷ்மீரில் 151, புதுச்சேரியில் 104,பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,47,97,269 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 49,622 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!
பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு!
"சும்மா விட மாட்டோம்" பயங்கரவாதிகளுக்கு எதிராக சூளுரைத்த ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடுAshmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs JyotikaAnnamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மூடப்படும் அட்டாரி எல்லை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி!
பாகிஸ்தானியர்களுக்கு தடை.. மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிரடி முடிவு!
"சும்மா விட மாட்டோம்" பயங்கரவாதிகளுக்கு எதிராக சூளுரைத்த ராஜ்நாத் சிங்
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
பாகிஸ்தான் சொன்னது என்ன? - பரபரப்பில் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாராம்!
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
IPL 2025 MI vs SRH: மும்பை படையை தாங்குமா சன்ரைசர்ஸ்? கம்மின்ஸ் ப்ளான் கைகொடுக்குமா?
'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
'ஜெய் ஶ்ரீ ராம்' சொல்லு என சிறுவனின் தொடையை கிழித்த கும்பல்...பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பால் தூண்டப்பட்டதா பஹல்காம் தாக்குதல் ?
Watch Video: மணமாகி 6 நாட்களில் மரணம்; கண்ணீருடன் கணவருக்கு இறுதிவிடை- கதறிய இளம் மனைவி!
Watch Video: மணமாகி 6 நாட்களில் மரணம்; கண்ணீருடன் கணவருக்கு இறுதிவிடை- கதறிய இளம் மனைவி!
HC on Ponmudi: இழிவான பேச்சு.. அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..
இழிவான பேச்சு.. அமைச்சர் பொன்முடியை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..
20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இரவு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
20 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இரவு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
Embed widget