'கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்' - ஆ.ராசாவின் மனைவி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US: 

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமாக பொறுப்பு வகித்தவர் ஆ.ராசா. தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பதவிவகித்த வருகிறார். பெரம்பலூர் மாவட்டம் புதுவேலூர் அவரது சொந்த ஊர் ஆகும். அவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். மயூரி ராஜா என்ற மகள் உள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆ.ராசா மனைவி பரமேஸ்வரிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து, அவர் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கீமோதெரபி சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில தினங்களாக பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

ஆ.ராசா உள்பட குடும்பத்தினர் மருத்துவமனையில் பரமேஸ்வரியின் உடனிருந்து கவனித்து வந்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்' - ஆ.ராசாவின் மனைவி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இதையடுத்து, முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆ.ராசா மனைவி பரமேஸ்வரி மறைவிற்கு இரங்கல் செயதியை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

“ தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வாழ்விணையர் பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

https://tamil.abplive.com/news/tamil-nadu/health-minister-says-84-lakh-vaccine-done-in-tamilnadu-4459

திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும் - தாழ்விலும், நெருக்கடிகளிலும் - சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர்  பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பரமேஸ்வரியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் உடல் அவர்களது சொந்த ஊரான பெரம்பலூர் மாவட்டம் புதுவேலூரில் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆ.ராசா கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி வழக்கில் சிக்கியவர் என்பதும், கடந்த தேர்தல் பரப்புரையில் முதல்வர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: mk stalin dmk death a.rasa wife

தொடர்புடைய செய்திகள்

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

Black Fungus | கோவையில் 123 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு : அதிகரிக்கும் அச்சம்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பார்டர் தாண்டிச்செல்லும் மதுப்பிரியர்கள் : காவல்துறையினர் வைத்திருக்கும் கெடுபிடி ப்ளான்..!

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

டாப் நியூஸ்

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!